தன்னை விட சூப்பரா நடிக்கிறாரா? நடிகரின் சீன்களை நறுக்கிய ரஜினிகாந்த்! தோள்கொடுத்த கமல்ஹாசன்!

தன்னை விட சூப்பரா நடிக்கிறாரா? நடிகரின் சீன்களை நறுக்கிய ரஜினிகாந்த்! தோள்கொடுத்த கமல்ஹாசன்!
X
படையப்பா படத்தில் டம்மி ரோல் ஒன்றைக் கொடுத்து அவரை பெரிய அளவில் நடிக்க விடாமல் செய்ததிலும் ரஜினிகாந்தின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்தால்தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்றில்லாமல் எந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தாலும் அதில் தன் முழு திறமையையும் போட்டு நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர்கள் பெரும்பாலும் கமல்ஹாசன் படங்களிலேயே தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை நாம் கவனித்திருக்க முடியும்.

தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் தான் யார் என்பதை நிரூபித்திருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நாசர். அவர் ரஜினிகாந்துடன் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அவர் நடித்த படங்களில் முக்கியமானது வேலைக்காரன்.

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி படங்களைத் தேடித் தேடி பார்த்தவர், பின் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இயக்குநர் பாலச்சந்தரால் கவரப்பட்டு அவருடைய படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறார். அவரின் படங்களைப் பார்த்தே சினிமா கற்றுக் கொண்டிருக்கிறார் நாசர்.

இளம் வயதிலேயே நல்ல படிப்பு, ஆங்கிலம் பேசும் புலமை இருந்ததால் தாஜ் ஹோட்டலில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்துள்ளார். அதேநேரம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புக்கான பயிற்சியையும் மேற்கொண்டு வந்திருக்கிறார். அவ்வப்போது பாலச்சந்தரைக் காண நேரில் அவரது அலுவலகத்துக்கே சென்றுவிடுவாராம்.

அப்படி ஒருநாள் நாசரை நேரில் பார்த்தவர், அடிக்கடி இந்த பக்கம் வருகிறாரே என்ன என்று விசாரித்த போது அவரின் நடிப்பு ஆசை பற்றி தெரியவந்துள்ளது பாலச்சந்தருக்கு. அதனால் தனது கல்யாண அகதிகள் படத்தில் நாசரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாலச்சந்தர். அந்த படத்துக்காக புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து புகைப்பிடிப்பவராக அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்துடன் வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர், பல காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருப்பாராம். ஆனால் பல காட்சிகள் படத்திலிருந்து வெட்டப்பட்டு விட்டதாம். இயக்குநர் எஸ் பி முத்துராமனிடம் சென்று கேட்டபோது ரஜினிகாந்த் இந்த படத்தின் நாயகன், அவருடைய காட்சிகளை விட உங்களுக்கு அதிக பர்பாமன்ஸ் பண்ணும் இடங்கள் இருக்கிறது என்று ரஜினிகாந்த் வருத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதே போல தர்மத்தின் தலைவன் படத்தில் வேண்டுமென்றே காட்சிகளைக் குறைத்ததாக கூறப்படுகிறது.

இதுபோல படையப்பா படத்தில் டம்மி ரோல் ஒன்றைக் கொடுத்து அவரை பெரிய அளவில் நடிக்க விடாமல் செய்ததிலும் ரஜினிகாந்தின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு அவரை எந்த இயக்குநர் தேடி வந்தாலும் ரஜினி படங்களில் நடிப்பதில்லை எனும் முடிவுக்கு வந்திருக்கிறார் நாசர். இயக்குநர் பாலச்சந்தரே அழைத்தும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் பிற்காலத்தில் சந்திரமுகி, கோச்சடையான், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தார் நாசர். ஆனாலும்

அந்த அளவுக்கு கலையை நேசிப்பவருக்கு தோள் கொடுத்தது கமல்ஹாசன்தான். சத்யராஜ் கதாநாயகனாக நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் முதன் முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் அதுவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நாசரை நடிக்க வைத்தார் கமல்ஹாசன். மகளிர் மட்டும் படத்தில் அவரை கதாநாயகனாக (நெகடிவ் ரோல்) வைத்து படமெடுத்தார் கமல்ஹாசன். இதுமட்டுமின்றி நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராசன், கலைஞன், குருதிப்புனல், அவ்வை சண்முகி, தேவர்மகன், ஹேராம், அன்பே சிவம், விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், விஸ்வரூபம் 1, 2, உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நாசர் இதில் பல படங்களில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தையும் ஓவர் டேக் செய்து நடித்திருப்பார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!