ஜெயிலர்’ திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு நிறைவு

ஜெயிலர்’ திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு நிறைவு
X

பைல் படம்.

ஜெயிலர்’ திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.


இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக கூறியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!