ரெட்ஜெயண்ட் வெளியீட்டில் ' காபி வித் காதல்'

ரெட்ஜெயண்ட் வெளியீட்டில்  காபி வித் காதல்
X

பைல் படம்.

இயக்குநர் சுந்தர் சி-யின் 'காபி வித் காதல்' படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழ்த் திரையுலகில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட்டு வெற்றிப் பட வெளியீட்டின் முதல் வரிசையில் இடம்பிடித்து வருகிறது. அண்மையில், 'விக்ரம்', 'கோப்ரா', 'டைரி' ஆகிய படங்களை வெளியிட்டு சக்சஸ் கொடுத்தது.

அடுத்தடுத்து, 'வெந்து தணிந்தது காடு', 'கேப்டன்', 'விடுதலை' என எதிர்பார்ப்பு மிக்க படங்களை வெளியிடவிருக்கிறது. இந்தநிலையில்தான், அடுத்ததாக, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'காபி வித் காதல்' படத்தை வெளியிடவிருக்கிறது.

இப்படத்தை, நடிகை குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில், நடிகர்கள் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நடிகைகள் மாளவிகா சர்மா, அம்ரிதா மற்றும் ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் 'காபி வித் காதல்' வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!