நடிகை ரேவதி பிறந்த நாள்

நடிகை ரேவதி பிறந்த நாள்
X

நடிகை ரேவதி

மண்வாசனை படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான ரேவதி இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகை ரேவதி கேரளாவை பூர்விகமாக கொண்டவர். 1966 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தார். கேரளாவை சேர்ந்த இவரது இயற்பெயர் ஆசா கேளுண்ணி குட்டி. இவர் தந்தை கேளுண்ணி. மண்வாசனை படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான ரேவதி இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து புதுமைப்பெண். வைதேகி காத்திருந்தாள், ஆகாயத் தாமரைகள், ஆண்பாவம், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, பகல் நிலவு, மவுன ராகம், புன்னகை மன்னன், அரங்கேற்ற வேளை, தேவர்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

1980 களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, மோகன், கார்த்தி உள்ளிட்டவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.

சில படங்களை இயக்கியும் உள்ளார். தேவர் மகன் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இதேபோல் அவர் இயக்கிய மித்ர், மை பிரெண்ட் ஆங்கில திரைப்படம் சிறந்த ஆங்கில படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். 1988 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார் ரேவதி. இருவரது திருமண பந்தம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கவில்லை என்பது தான் மிக வருத்தம்.

இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2000 ஆம் ஆண்டு விவரத்து கோரி நீதிமன்றம் சென்றனர். பின்னர் இவர்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து கொடுக்கப்பட்டது. விவாகரத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்த நிலையில் ரேவதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்குழந்தையை தத்து எடுத்து அவருக்கு மகி என்று பெயர் சூட்டியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பா பாண்டி படத்தில் நடிகர் ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்தார் ரேவதி. தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். நடிகை ரேவதியின் 55 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!