அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நாடோடிகள் திரைப்பட நடிகை பாலியல் புகார்

அதிமுக  முன்னாள் அமைச்சர் மீது நாடோடிகள் திரைப்பட நடிகை பாலியல் புகார்
X
முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன் மீது நாடோடிகள் திரைப்பட நடிகை புகார் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன் மீது நாடோடிகள் திரைப்பட நடிகை புகார் அளித்து அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாடோடிகள் திரைப்பட நடிகை ீீசாந்தினி மலேசிய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாதவர் ஆவா்ர்.கடந்த 2017 ம் ஆண்டு முதல் பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.இவரது தந்தை பெயர் தேவா.

இவர் இன்று காலை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவகத்திற்கு வருகைதந்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி 5 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து விட்டு இப்போது ஏமாற்றியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் நாடோடிகள் பட நடிகை சாந்தினி படபடப்போடு கூறியது மட்டுமில்லாமல் எழுத்து வடிவில் புகாரும் அளித்தார்.


சாந்தினி அளித்த புகாரில், தன்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் ஏமாற்றுகிறார், கருவை கலைக்க வைத்து அடித்து துன்புறுத்தினார்.அத்துடன் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார்.என்றும் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார் என்று துணை நடிகை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!