புளூசட்டை மாறன் இயக்கிய ஆண்டி இந்தியன் படத்துக்கு இதுவரை சென்சார் கிடைக்கலையாம்

புளூசட்டை மாறன் இயக்கிய ஆண்டி இந்தியன் படத்துக்கு இதுவரை சென்சார் கிடைக்கலையாம்
X
ஆண்டி இந்தியன் படத்துக்கு இதுவரை சென்சார் கிடைக்கல- இது குறிச்சு அப்பட புரொடியூசர் ஆதம் பாவா சொன்னதா ஒரு சேதி பரவுதுங்கோ..

புளூசட்டை மாறன் இயக்கியதா சொல்லப்படும் ஆண்டி இந்தியன் படத்த்துக்கு இதுவரை சென்சார் கிடைக்காத சூழலில் இது குறிச்சு அப்பட புரொடியூசர் ஆதம் பாவா சொன்னதா ஒரு சேதி பரவுது:🔥

எங்க படத்தை பிளாக் பண்ணச் சொல்லி சென்சார் போர்டுக்கு பின்னாடி அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கு. யாருன்னும் சொல்லிடலாம்.

இங்கே ரிஜெக்ட் பண்ணியதால் ரிவைசிங் கமிட்டிக்கு போன எடத்துலே நாகபரணானு ஒரு டைரக்டர் தலைமையில பத்து பேர் நம்ம படத்தை பார்த்தாங்க. முடிச்சவுடன், 'அடேங்கப்ப இம்புட்டு டேரிங்கா எடுத்திருக்கீங்க. குட்.. நல்லா இருக்கு'னு பாராட்டி முடிச்சுபுட்டு, ' ஆன பாருங்க கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணா, இந்தப் படம் எந்த சிரமும் இல்லாமல் வெளியே வந்திடும்'னு சொன்னார்.

என்ன மாதிரியான காம்ப்ரமைஸ் பண்ணணும்னு கேட்டதுக்கு, 'முதல்ல படத்துடைய டைட்டிலை மாத்துங்க. யாரை ஆன்டிஇண்டியன்னு சொல்றீங்க?' னு கேட்டார். 'மத ஒற்றுமையை சீர்குலைக்கிற, அரசியலுக்காக மக்களை பலிகடாவாக்குறவங்களை ஆன்டி இண்டியன்னு சொல்றோம். அந்த மாதிரியான கதாபாத்திரங்களை படத்தில் பார்த்திருப்பிங்க'னு சொன்னோம். 'சரிதான். ஆனாலும், அந்த டைட்டிலை மாத்தணும்'னு சொன்னாங்களே தவிர, தெளிவான காரணத்தை சொல்லலை. அதிலேயே வாக்குவாதமாகிடுச்சு.

அப்படி, இப்படி, எப்படியோ இந்த ஆ.இ படத்துக்கு தடை அப்படீன்னு நியூஸ் கிடைச்சதும், இங்குள்ள நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடைய வாட்ஸ் அப் குரூப்ல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, 'God is great'னு மெசேஜ் பண்றார். பதிலுக்கு லிப்ரா ரவீந்திரன் 'Double Great'னு போடுறார்.

புளூசட்டைக்காரருக்கும் உங்களுக்கும் ஏதேதோ விவகாரம் இருக்கலாம். அது உங்களுக்கும் அவருக்குமானது. ஆனா அவர் என்கிட்ட ஒரு கதை சொன்னார். அதை நான் தயாரிச்சேன். அந்த வகையிலே ஒரு புரொடியூசரோட இன்வெஸ்ட்மெண்ட் முடங்கிறதுல இவங்களுக்கு ஏன் அம்புட்டு ஹேப்பி-ன்னு தெரியலை,

பொதுத்தளத்திலேயே இப்படி பண்றாங்கன்னா, பின்னாடி இந்தப் படத்துக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்திருப்பாங்க. தமிழ் திரையுலகமே மாறனுக்கு எதிரா பெரிய அழுத்தம் கொடுத்திட்டிருக்கு. படம் நல்லாயில்லைனா நீங்களும் திட்டுங்க. நாங்க ஏத்துக்க தயாரா இருக்கோம்.

இப்ப ரிவைசிங் கமிட்டியிலயும் இப்படி சொல்லிட்டதனால, அடுத்து ட்ரிபூனலுக்கு போகணும். எங்க நேரமோ என்னவோ அதை கலைச்சுட்டாங்க. அதனால, நீதிமன்றத்துக்கு போகலாம்னு இருக்கோம். அதே மாதிரி, யாரை காப்பாத்துறதுக்கு சென்சார் போர்ட் இருக்குனு தெரியலை. இவங்களுடைய நடவடிக்கையெல்லாம் பார்க்கும்போது ஒரு கட்சியுடைய கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குனு தெரிய வருது. ஏந்த சமரசமும் இல்லாமல் எந்த கட்டும் இல்லாமல் எடுத்தது எடுத்த மாதிரியே, இந்தப் படம் வெளியாகுற வரை போராடுவேன்'' அப்படீன்னு ஆதம் பாவா அடிச்சுச் சொல்றாராம்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!