பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்
X
யூசுப் கான் என்ற இயற்பெயரைக் கொண்ட திலீப் குமார் பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார். அவருக்கு வயது 98.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு 98 வயதானதால், வயது மூப்பின் காரணமாக இதுபோன்ற உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது மனைவி சாய்ரா பானு திலீப்பின் உடல்நிலை தேறி வருவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி திலீப் குமார் காலமானார். இந்த தகவலை திலீப் குமாரின் மருத்துவர் ஜலீல் பார்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

யூசுப் கான் என்ற இயற்பெயரைக் கொண்ட திலீப் குமார் பாலிவுட்டின் 1950,60களில் பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். அவரது நடிப்பில் வெளியான 'தேவ்தாஸ்', 'மொகல்-இ-அஸாம்', 'கங்கா ஜமுனா' உள்ளிட்ட படங்கள் இன்றும் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலீப் குமார் இறுதியாக 1998ஆம் ஆண்டு வெளியான 'கிலா' என்ற படத்தில் நடித்திருந்தார்.

திலீப் குமாரின் மறைவுக்கு இந்திய திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself