இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் தேஜாவு

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் தேஜாவு
X

அருள்நிதி நடிப்பில் தேஜாவு

தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது 'தேஜாவு' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பாக K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் 'தேஜாவு'


தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது 'தேஜாவு' (DEJAVU) எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

'தேஜாவு' படத்தினை அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தினை வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். அவருடன் இனைந்து PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனை-தயாரிப்பை மேற்கொள்வதுடன், ஒளிப்பதிவையும் கையாண்டு வருகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த் பணியாற்றி வருகிறார்.

அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் தமன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இதனையடுத்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


நடிகர்கள்:

அருள்நிதி

மது ஷா (மது பாலா)

அச்சுத் குமார்

ஸ்முருதி வெங்கட்

ராகவ் விஜய்

மைம் கோபி

சேத்தன்

காளி வெங்கட்

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – K விஜய் பாண்டி – White Carpet Films

இனை தயாரிப்பு - PG முத்தையா – PG Media Works

கதை, திரைக்கதை, இயக்கம் – அரவிந்த் ஸ்ரீநிவாசன்

ஒளிப்பதிவு - PG முத்தையா

இசை – ஜிப்ரான்

படத் தொகுப்பு - அருள் E சித்தார்த்

வசனம் – கண்ணா ஸ்ரீவத்சன், அரவிந்த் ஸ்ரீநிவாசன்

கலை இயக்குநர் - விநோத் ரவீந்திரன்

சண்டை பயிற்சி - பிரதீப் தினேஷ்

மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!