முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு… 'விக்ரம்' வெற்றிக்கு வாழ்த்து..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் கமல்ஹாசன்.
Today CM Meeting - நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம், குறைந்த நாட்களில் கூடுதலான திரைகளில் முதல் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த படமாக சாதனைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
'விக்ரம்' படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடவும் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதைப்போன்றே, தமிழ்நாடு முழுவதும் 'விக்ரம்' படத்திற்கும் முதல் மூன்று நாட்களுக்கு கூடுதல் கட்டணத்தில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கென முதல் மூன்று நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அதிகாரபூர்வமான அனுமதி அளித்திருந்தது.
தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட திரைகளில் இரண்டாவது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக 'விக்ரம்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனும் படத்தின் இணைத்தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரனும் சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, 'விக்ரம்' படத்தின் இமாலய வெற்றிக்காக பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu