யூரோ கால்பந்து போட்டியிலும் 'வலிமை' படத்தின் அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்

யூரோ கால்பந்து போட்டியிலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்
X

 வலிமை படத்தின் அப்டேட் 

யூரோ கோப்பை தொடரிலும் வலிமை அப்டேட் எப்போது என்ற கேள்வி ஒலித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூரோ கால்பந்து போட்டியிலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பதாகையை தூக்கி காண்பித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளது. தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் பிரதமர் மோடி வரை பலரிடமும் அஜித் ரசிகர்கள் கேட்டிருந்தனர்.

சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போதும் வலிமை படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கேட்டிருந்தது அதிகம் பேசப்பட்டது. அந்த வகையில் தற்போது யூரோ கோப்பை தொடரிலும் வலிமை அப்டேட் எப்போது என்ற கேள்வி ஒலித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் நடைபெற்ற ஸ்பெயின் - இத்தாலி இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு பதாகையை தூக்கி காண்பித்தார். வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் தயாராகி வருவதாகவும், விரைவில் வெளியிடப்படும் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!