தலைவி பட புரொமோசனுக்கான வேலை ஆரம்பிடுச்சிடுச்சாம்
தலைவி பட புரொமோசனுக்கான வேலை ஆரம்பிடுச்சிடுச்சாம்
இந்த படம் பத்தி டைரக்டர் விஜய்கிட்டே கேட்ட போது, "இது அரசியல் படமல்லீங்க. அரசியலுக்குள்ளே நாங்க போகவே இல்லை. ஜெயாம்மான்னாலே இன்ஸ்பிரேஷனல் லேடி. ஒவ்வொரு லேடீசுக்கும் அவங்க வாழ்க்கை உத்வேகம் அளிக்கக்கூடியது. ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகத்துல ஒரு பெண் தனியா நின்னு நடிகையாகி, அரசியல்லேயும் குதிச்சு, ரெண்டுலயும் ஜெயிச்சிருக்கார். அந்த வகையிலே அவங்களோட சினிமா கேரியரைப் பத்தி, சுவாரசியமான சம்பவங்கள் பத்திப் பேசியிருக்கோம்
1965-ம் ஆண்டில் வெளியான 'வெண்ணிற ஆடை' படத்துல ஜெயலலிதாம்மா அறிமுகமானாங்க. அங்கிருந்து ஆரம்பிக்குது கதை. முதல்முறையா அவங்க முதலமைச்சரா பதவி ஏற்கும் நிகழ்வு வரை, அதாவது 1991-ம் ஆண்டுக் காலகட்டம் வரை இருக்கும். இதை இந்தியா முழுமைக்குமான படமாதான் பண்ணியிருக்கோம். இந்தி, தெலுங்கிலும் ரிலீஸ் ஆகப்போகுது.
ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆரா அரவிந்த்சாமி சார், எம்.ஜி.ஆரின் மேனேஜராக சமுத்திரகனி சார் என்று கதைக்கான ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொரு கேரக்டரையும் நம் கண்முன் கொண்டு வந்ததுல மேக்கப்மேன் பட்டணம் ரஷீத் சாருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு. இந்தப் படத்தோட தூணே அவர்தான்.- அப்பட்டீன்னார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu