சன் பிக்சர்சின் அண்ணாத்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போறதா முடிவு செஞ்சுட்டாய்ங்க

சன் பிக்சர்சின் அண்ணாத்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போறதா முடிவு செஞ்சுட்டாய்ங்க
X
ரஜினிகாந்த் நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

சன் பிக்சர்சின் அண்ணாத்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போறதா முடிவு செஞ்சுட்டாய்ங்க...

ரஜினிகாந்த் நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது, அங்கு கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் படத்தின் வெளியீடு எப்போது என்கிற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வந்தது. தமிழ்ப் புத்தாண்டு, சுதந்திர தினம் எனப் பல தேதிகள் ஊகிக்கப்பட்டன.

ஆனால், தற்போது 2021 தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதியன்று திரைப்படம் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!