பராசக்தி ஹீரோ -தெரிந்த நடிகர் தான் - தெரியாத வரலாறு ஒன்று உண்டு
தெரிந்த நடிகர் -தெரியாத வரலாறு.
தெரிந்த நடிகர் தெரியாத வரலாறு -நடிகர் திலகம் என்றதும் சட்டென நினைவில் வருவது பராசக்தி ஹீரோ தான்
இன்றும் வரலாறு நிகழ்ச்சிகளில் இவர்(வஉசி,கட்டபொம்மன்,கொடிகாத்தகுமரன்,உட்பட பலர்) உருவம் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்யும் போது நம் நினைவில் வருவது சிவாஜி தான். அந்த அளவுக்கு வரலாறு ஆன்மீகம் என்று அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்த நடிகர் தன் வாழ்விலும் மிகப் பிரமாண்டமாக நடித்த கதை தான் இந்த செய்தி தொகுப்பு...
நடிகர் திலகத்தின் மனைவி கமலம் என்பது நம் எல்லாத்துக்கும் தெரியும். ஆனா அந்த கட்ட பொம்ம நடிகருக்கு இன்னொரு வீட்டம்மா இருந்தாங்க அப்படின்னு பட்சி சொன்னது..நம்பமுடியில்லை..... வில்லை..... இல்லை..... என அவரு பாடுன பாட்டு தொனில ரோசித்து இருந்தாலும் நம்ம பட்சி பொய் சேதி கூவாது அப்படின்னு விசாரிச்சா அதுல கெடச்ச சங்கதி இது தாங்க.சொல்வதெல்லாம் உண்மைங்கோ.
அந்த அம்மணி நேம் ரத்தின மாலா மெட்ராஸ் டி.நகர்ல தான் குடியிருந்தாங்களாம்.அவுக கிறிஸ்டியனாம் வீட்டு வால்ல மாட்டிருக்கும் அட்ரஸ் போர்டுல "ரத்தினமாலா கணேசன்" அப்படின்னு இருந்துச்சாம். இது நம்ம கணேசனா இருக்காது அந்த கணேசனா இருக்கும் அப்படின்னு தெருவுல போற வாரவுக எல்லாம் தனக்கு தானே கேள்வியும் கேட்டுக்கினு பதிலும் யோசிச்சிக்கினு போயிருக்காய்ங்க.ஏன்னா அந்த நேரத்துல திரைத்துறைல ஜெமினி கணேசரு காதல் மன்னனா வலம் வந்தவரு.. தற்போதைய காதல் மன்னன் போல அவரும் அப்படி இப்படித்தானாம். அதனால பப்ளிக் அந்த கணேசன் அப்படின்னு நெனச்சாங்களாம்.. ஆனா அந்த நேம் போர்டுல இருந்தது நம்ம பராசக்தி கதாநாயகரு தான்..எதுக்கு பராசக்தி நாயகருன்னு சொல்றேன் அப்படின்னு கேட்டா கதையை முழுசா படிங்க புரியும்..
வாங்க கதைக்குள்ள போவோம்..
அந்த நாடகநடிகை பெயர் ரத்தினமாலா புரட்சி தலைவர் நடித்த வெற்றி படம் என்தங்கை அந்த படத்தில் எம்ஜிஆரின் தங்கையா ஈவிசரோஜா நடித்திருப்பார். அந்த கால கட்டத்தில் நாடகங்கள் பல திரைப்படமாக வெளிவந்தது.. நம்ம டிஆர் பாணில சொல்லணும் அப்படின்னா முதல்ல தரையில அப்புறம் தான் திரையில ..அதன் படி என்தங்கை திரைப்படம் படமாவற்கு முன்னாடி நாடகமாக மெட்ராஸ்ல பல இடங்களில் நடத்தப்பட்டது.அதில் புரட்சி தலைவர் தங்கச்சியாக நடித்தது நம்ம கதை கதாநாயகி ரத்தின மாலா தான்... அந்த சமயத்துல அதாவது நாடக ஒத்திகை பார்க்கும் போது அடிக்கடி அந்த ஸ்பாட்டுல பராசக்தி ஹீரோ போய் விடுவாராம்..இவரை நன்கறிந்த நண்பர் எம்ஜிஆர் குறும்பாக பார்த்து நக்கலாக சிரித்து கலாய்ப்பது அடிக்கடி நடக்குமாம்.பராசக்தி ஹீரோ ரத்தின மாலா பத்தி தெரிஞ்சவங்க நமட்டு சிரிப்புடனும் தெரியாதவர்கள் சாதரணமாகவும் கடந்து செல்வார்களாம்.
இப்படிக்கா போயிக்கிட்டு இருக்குற காலத்துல புரட்சி தலைவரு கூட ஜோடியாஇன்பகனவு அப்படிங்குற நாடகத்துல நடிச்சாங்களாம்..பராசக்தி திரைக்கு வருவதற்கு பல முறை தரையில் நாடகமா நடத்தப்பட்டதாம்.பலருக்கு டவுட்டு எதுக்கு இப்படி அடிக்கடி இதே நாடகத்த போடுறாங்க அப்படின்னு.. அப்புறம் தான் சங்கதி தெரிஞ்சதுஇ நாடக்துல ஹீரோயின் ரத்னமாலா அப்படின்னு.. அப்ப சரி நடக்கட்டும்-னு இருக்கும் போது டுஅடுத்த நாடகமும் தரையில் அரங்கேறுது.வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படின்னு திரைக்கு வரும் முன் தரையில் நடைபெற்ற நாடகம்.அதுலயும் ஹீரோயின் ரத்னமாலாதான்..திரைக்கு வரும்போது ரத்தினமாலா திரைக்கு முழுக்கு போட்டதால் படத்துல வரலட்சுமி கதாநாகியா நடிச்சாங்களாம்.
இந்த சங்கதியை அரைகுறையா தெரிஞ்சவிங்க நம்ம புரட்சி தலைவரு நடிச்ச எங்க வீட்டு பிள்ளை படத்துல நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவர் மாம்பழம் வேண்டுமென்றார், அப்படின்னு ஒரு சாங் வரும்.அதுல ஆடி பாடுன நடிகை பேரும் ரத்தின என ஆரம்பிக்குமாம். இவரா அவரா என தன்னைத்தானே குழப்பிக்கிட்டு இருக்கும் போது அதுக்கான பதிலும் கிடைத்தது.எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் ஜோடி வெறும் ரத்னா... ஏன்னா ரத்தினமாலா நாடகத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்கிட்டதா சிலர் சொன்ன சேதி..நானும் அறிந்தது அதுதான் திரைப்படங்களில் நடித்தாக எந்த ஆதராமும் கெடைக்கல..
ஏன்னா இந்த ரத்தினமாலா நாடக நடிகை மட்டுமில்லை நம்ம மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல் நல்ல குரல்வளம் கொண்ட பாடகியும் கூட.அப்படி என்ன பாட்டு பாடினாங்க அப்படின்னு கேட்டா வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல வரும் போகாதே போகாதே என் கணவா..பாடலை பாடுனது ரத்தின மாலா தான்( எத நெனச்சு அந்த பாட்டை இவுக கிட்ட கொடுதாங்கன்னு சத்தியமா எனக்கு இதை எழுதும்(சாரி டைப்பும்) போது தான் தெரியுது.சரி அடுத்து நம்ம சந்திரபாபு குமாரராஜா அப்படிங்குற படத்துல உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு இந்த பக்கம் திருப்பு…ஏம்மா வெறுப்பு உனக்கு என்ன வந்தாலும் நானே பொறுப்பு.. நானே பொறுப்பு இதுலயும் பாடியிருங்காங்க.அதுமட்டுமில்ல பானுமதி நடிச்ச அன்னை படத்துல அதே சந்திர பாபு கூட தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும் அப்படின்னு பாடுறதும் ரத்ன மாலாதான்.
குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க அப்படிங்குற சாங் குலேபகாவலி படத்துல வரும் அதை பாடியதும்.அவுங்க தான்.அத்தோட இல்லாம வெவரம் தெரிஞ்சி 100 படத்துக்கு மேல சினிமாவுக்கு பாடியிருக்காங்களாம்.
நம்ம பராசக்தி ஹீரோ இனியும் பொறுக்க முடியாது பொங்கி எழுந்துட்டேன் வா உன்னை ஊரறிய திருமணம் செய்றேன் அப்படின்னு ரத்தினமாலா கிட்ட கேட்டதுக்கு வேண்டாங்க உங்க கிட்ட நடிப்புதிறன் நல்லா இருக்கு.நடிப்பால் நீங்கள் மேலும் உசரத்துக்கு போகணும்.இந்த 2ம் கல்யாணத்துனால உங்க இமேஜ் டேமேஜ் ஆகிடும்.ஊரறிய நடந்தா தான் கல்யாணமா?நான் உங்க மனைவிதான் எப்போதும் அதுல உங்களுக்கு டவுட்டு வேணாம்..நீங்க கமலாம்மா கூடயே குடும்பம் நடத்துங்க நான் கிராஸ் பண்ண விரும்பல அப்படின்னு மண்டையில உரைக்குற மாறி சொல்லிட்டு ஒதுங்கிட்டாங்களாம்.
பராசக்தி ஹீரோ மேட்டரு நடிகர் திலகம் வீட்டம்மா (கமலம்மாவுக்கு)தெரியுமாம் ( என்னஒரு பெருந்தன்மை) அதுனால தான் தன்னுடைய மனசுல பெரிய இடத்துல வெச்சு அடிக்கடி ரத்தினமாலா பத்தி பேசி வந்தாராம்..
நடிகர் திலகம் எந்த புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாலும், வேறு ஏதாவது நல்ல சேதி கெடச்சாலும் ரத்தினமாலா வீட்டுக்கு போய் சந்தோசத்தை ஷேர் பண்ணிக்கிடுவாராம்.இதெல்லாம் விட இவர்கள் இருவருக்கும் பிறந்த பெண்குழந்தை பேரு லைலா, இவரது கணவன் தன்ராஜ் இவரும் நாடக நடிகராம்.. சங்கதி தெரிஞ்சவங்க தன்ராஜை பராசக்தி ஹீரோ மருமவன் அப்படின்னு தான் கூப்பிடுவாங்களாம்
கதையின் கடைசியும் ரத்தின மாலாவின் கடைசி நாட்களும்...
இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76 அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
(கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதேபோல, எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா அநேகரின் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலித்தார்) அப்படின்னு எங்கிருந்தோ ஒரு அசரீரி கேட்குது...
#இன்ஸ்டாநியூஸ்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu