நடிகர் அர்ஜுன் தனது சொந்த செலவில் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
நடிகர் அர்ஜுன் தனது சொந்த செலவில் கெருகம்பாக்கத்தில் உருவாக்கிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இன்று இனிதே நடந்தது
நடிகர் அர்ஜூன் கெருகம்பாக்கத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோவிலை பிரம்மாண்டமாக கட்டி வந்தார்.வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பம்சமாக இந்த கோவிலில் அனுமான் அமர்ந்த தோரணையில் காட்சி அளிக்கிறார்.
ஆக்சன் கிங் அர்ஜூன் ஜென்டில்மேன், முதல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மனதில் தனி இடத்தில் உள்ளார். ஆக்சன் ஹீரோவாக கலக்கி வந்த அர்ஜூன் தற்போது வில்லன் கதாபாத்திரத்தை கையில் எடுத்து அதிலும் அசால்டாக நடித்து வருகிறார்.
நடிகர் அர்ஜூன் கடந்த சில ஆண்டுகளாகவே கெருகம்பாக்கத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோவிலை கட்டி வந்தார். வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பம்சமாக இந்த , கோவிலில் அனுமான் அமர்ந்த தோரணையில் காட்சி அளிக்கிறார். இந்த சிலையின் எடை 140 டன் என்று கூறப்படுகிறது. இதன் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இது குறித்து அர்ஜூன் கூறும்போது இது என்னுடைய நீண்டநாள் கனவாகும், இந்த கும்பாபிஷேகத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்த திட்டமிட்டு இருந்தேன்.ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் நிலைமை சீராகாததால் தற்போது ஒரு சிலரின் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் அதிகம் வரமுடியாததால் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை அர்ஜுன் சர்ஜாவின் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பானது . மேலும், கும்பாபிஷேகம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நடிகர் அர்ஜுன் சந்தித்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அர்ஜுன் ஆஞ்சநேய சுவாமியின் தீவிர பக்தராவார். இவர், கிருஷ்ணா வம்சி இயக்கிய நிதின் நடித்த 'ஸ்ரீ ஆஞ்சநேயம்' படத்தில் ஆஞ்சநேய கடவுளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu