சென்னை-தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தேர்தல் நடைபெற்றது.

சென்னை-தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தேர்தல் நடைபெற்றது.
X

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தேர்தல்

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தேர்தல் ஜனநாயக முறைப்படி இன்று (26.05.2021) நடந்து முடிந்தது.

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தேர்தல் ஜனநாயக முறைப்படி இன்று (26.05.2021) நடந்து முடிந்தது. கூட்டமைப்பில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் எண்ணிக்கை மொத்தம் 20. அதில் பதிவான வாக்குகள் 15. பதிவான வாக்குகள் அனைத்தும் ஒருமித்த விதத்தில் கீழ்க்கண்ட நிர்வாகிகளுக்கு ஆதரவாக பதிவாகி உள்ளன .

அவ்வகையில் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பின்வருமாறு ;-

உதயம்.கே - தலைவர்

வி.பி. தமிழ்பாரதி - செயலாளர்

ராஜா வெங்கையா-பொருளாளர்

துணைத் தலைவர்கள்- டி.நேமிராஜ், முருகன் விஜய்

இணைச் செயலாளர்கள்-குமரேசன்,ஏ.கஜபதி

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வெற்றி பெற்றவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது;மேற்காணும் நிர்வாகம் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நலனுக்காக பொறுப்புடன் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதோடு புதிய நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!