நடிகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் சமூக ஆர்வலர் புகார்
நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் சமூக ஆர்வலர் புகார்
சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெண்கள் குறித்து தொடர்ந்து அருவருக்கத்தக்க வகையில் பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் சமூக ஆர்வலர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிச்சிருக்கார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் ஆபீசில் சோஷியல் ஆக்டிவிட்டி திவ்யா என்பவர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பெண்கள் குறித்து அருவருக்கதக்க வகையில் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து பேசி வருகிறார்.
அரசியல் மட்டுமல்லாமல் சமூகத்தில் ஏற்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராகப் பேச பெண்கள் தற்போது தான் முன்னுக்கு வர துவங்கியுள்ளதாகவும், அவர்களை இதுபோன்ற நபர்கள் தடுக்கும் எண்ணத்துடன் சொந்த விஷயங்களைக் குறிப்பிட்டு அருவருக்கத்தக்க வகையில் பேசி வருவது ஏற்புடையது அல்ல.
அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் போன்று பலரும் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்பி, பெண்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கத் துவங்கியுள்ளதால், இதை உடனடியாக தடுக்க வேண்டியது அவசியம். பயில்வான் ரங்கநாதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் திவ்யா, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்ள பெண்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சொந்த விஷயங்களைக் கிளறி அருவருக்கத்தக்க வகையில் பயில்வான் ரங்கநாதன் போன்ற நபர்கள் பேசி வருகிறார்.
முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தனியாக குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில், பெண்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க எண்ணி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரைப் போன்று இன்னும் பெண்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவிடும் நபர்களைக் கண்டறிந்தும் உரிய நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" அப்படீன்னு சொன்னார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu