/* */

'சந்திரமுகி-2' ஹீரோயின் ஆன்ட்ரியா..?!

ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி-2' படத்தின் நாயகி மற்றும் படப்பிடிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சந்திரமுகி-2 ஹீரோயின் ஆன்ட்ரியா..?!
X

ஓரிரு நாட்களுக்கு முன்பு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு நடிக்கும் 'சந்திரமுகி-2' படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தநிலையில், படத்தின் ஹீரோயின் யார்… படப்பிடிப்பு எப்போது தொடங்கவிருக்கிறது என்பன போன்ற தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா ஜோடிகளாக நடித்த 2005-ல் வெளியான 'சந்திரமுகி' படத்தை இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது. படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்தார்.

தற்போது தயாராகும் 'சந்திரமுகி-2' படத்தினை லைக்கா புரொக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' படங்களுக்கு இசையமைத்த கீரவாணி படத்துக்கு இசையமைக்கிறார்.

அதேபோல், ஹீரோயின் யார் என்ற டிஸ்கஷன் நடந்துகொண்டிருக்கிறது.

நடிகை ஆன்ட்ரியா அல்லது ராஷி கண்ணா ஆகியோரில் ஒருவரே ஹீரோயினாகலாம் என்கிறார்கள். இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஆயினும் ஆன்ட்ரியாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரியவருகிறது. மேலும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் தயாரிப்புத் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 19 Jun 2022 6:05 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த