இந்திய சினிமாவை உலக அளவில் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை - எல். முருகன்

இந்திய சினிமாவை உலக அளவில் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை - எல். முருகன்
X

மத்திய இணையமைச்சர் எல். முருகன்

ஆவணப்படங்கள், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவை ஒட்டி, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஆவணப்படங்கள், சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், இந்திய சினிமாவை உலக அளவில் மேம்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இணை தயாரிப்புகளுக்கு மத்திய அரசு சலுகைகள் அறிவித்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!