/* */

நடிகர் விஜய் பட சிறப்பு காட்சிக்கு தடை விதிக்க கோரி முதல்வருக்கு மனு

வன்முறை செயலில் ஈடுபடும் விஜய் ரசிகர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

HIGHLIGHTS

நடிகர் விஜய் பட சிறப்பு காட்சிக்கு தடை விதிக்க கோரி முதல்வருக்கு மனு
X

நடிகர் விஜய் படத்தின் சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கவும், வன்முறை செயலில் ஈடுபடும் அவரது ரசிகர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என. தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனருக்கு மின்னஞ்சல் வாயிலாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் அனுப்பிய புகாரில்....

நடிகர் விஜய் படத்தின் சிறப்பு காட்சிக்கு தடை விதிக்க தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார்.

பெறுநர் :- மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

நகல் :-

1) உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள்.

2) உயர்திரு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.

நடிகர் விஜய் நடித்த #பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை வெளியான நிலையில் திருநெல்வேலி ராம் திரையரங்கில் டிரெய்லர் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்க இருக்கைகளை அடித்து உடைத்து துவம்சம் செய்துள்ள நிகழ்வு கடும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. பொறுப்பற்ற தன்மையோடு வன்முறை செயலில் ஈடுபட்ட நடிகர் விஜய் ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது என முன்னோர் சொன்ன கூற்று தற்போது திரையரங்குகளில் வீணாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் பீஸ்ட் பட டிரெய்லர் வெளியீட்டின் போதே நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளதை காணும் போது அப்படம் பிரதானமாக வெளியாகும் போது தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் என்ன நடக்குமோ.? என்கிற திக்.! திக்..!! திக்...!!! அச்ச உணர்வே மேலோங்குவதோடு மற்ற நடிகர்களின் ரசிகர்களோடு நடிகர் விஜய் ரசிகர்கள் மோதல் போக்கை கடைபிடித்து அதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகுவதற்கான சூழல் இருப்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது.

எனவே ஏப்ரல்-13ம் தேதியன்று தமிழகத்தில் வெளியாக இருக்கும் #பீஸ்ட் பட வெளியீட்டின் போது வன்முறை சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஏப்ரல் 13ம் தேதி நள்ளிரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் அத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடவும், திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட நடிகரின் நூறடிக்கும் மேலான கட்அவுட்டுகள் மீதேறி ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதால் அவர்கள் கீழே விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதோடு, திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கும் அது இடையூறு ஏற்படுத்தும் என்பதால் திரையரங்கு வளாகங்களில் மிகப்பெரிய அளவிலான கட்அவுட்டுகள் வைக்கவும், அதன் மீதேறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து பாலினை வீணடிக்கவும் நிரந்தரமாக தடை விதிப்பதோடு, காவல்துறையின் பாதுகாப்பினை அதிகப்படுத்தவும், அத்துடன் வன்முறை செயலில் ஈடுபடும் ரசிகர்கள் மீதும், அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இணைப்பு :-

1) விஜய் ரசிகர்களால் சூறையாடப்பட்ட நெல்லை ராம் திரையரங்கின் காணொளி பதிவு.

2) தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பிய மின்னஞ்சல் புகார் கடிதம் நகல்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

03.04.2022 / காலை 9.12மணி.


என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 April 2022 5:57 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்