லியோவுடன் மோதும் தனுஷ் படம்! அவரே சொல்லிட்டாரே அப்றம் என்ன?

லியோவுடன் மோதும் தனுஷ் படம்! அவரே சொல்லிட்டாரே அப்றம் என்ன?
X
தயாரிப்பாளர் தியாகராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் தேதி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு படங்களும் போட்டி போட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்துடன் போட்டி போட்டு தனுஷ் தனது படத்தை வெளியிட இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளர் தரப்பிலேயே கூறியிருப்பதால் அது உறுதியானதாகவே நம்பப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் விஜய் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். அவர் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு அவருக்கு நெருக்கமாகவே ரசிகர்களைக் கொண்டுள்ளவர் தனுஷ் இவர்களது படங்கள் பொதுவாக சோலோவாக ரிலீஸ் ஆகி நல்ல கலெக்ஷன் அள்ள வேண்டும் என்பதையே நடிகர்கள் விரும்புவார்கள். ஆனால் ரசிகர்களோ யாருடனாவது போட்டி போட்டு சண்டை போட்டு அதில் வென்றோமா தோற்றோமா என முட்டி மோத ஆசைப்படுவார்கள்.

அந்த வகையில் தனுஷ் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே மிகப் பெரிய போர் வர காத்திருக்கிறது என்று டிவிட்டர் தள வாசிகள் ஆரூடம் சொல்லி வருகிறார்கள். காரணம் லியோ வெளியாகும் அதே நாளில்தான் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.

இதனை மெய் என நிரூபிக்கும் வகையில் தயாரிப்பாளர் தியாகராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் தேதி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு படங்களும் போட்டி போட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Tags

Next Story