கேப்டன் மில்லர் டீசர்! தற்போது வந்த அப்டேட்!

கேப்டன் மில்லர் டீசர்! தற்போது வந்த அப்டேட்!
X
கேப்டன் மில்லர் டீசர் நள்ளிரவு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது வந்த அப்டேட் வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் நாளை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஒரு போஸ்டர் அப்டேட் வந்திருக்கிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய பாராட்டைப் பெற்ற இந்த படத்துக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் சரியாக போகாத நிலையில் அடுத்து தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியான இந்த படம் வாத்தியும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில்தான் தனுஷ் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத் தொடர்ச்சி மலை" ஆண்டனி, பால சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ். சத்யஜோதி டி ஜி தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தின் பின்னணி வரலாற்று கதையாகும். 1930-40 களில் உருவாகிறது இந்த படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. அதுவும் வரும் தீபாவளி நாளில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சற்று முன்பாக இந்த படத்திலிருந்து ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!