அக்டோபரில் தொடங்கும் 'கேப்டன் மில்லர்'..!

அக்டோபரில் தொடங்கும் கேப்டன் மில்லர்..!
X

பைல் படம்.

Captain Miller -நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கி வேகமாக நடைபெறுமாம்.

Captain Miller -நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தை, 'சாணி காகிதம்', 'ராக்கி' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இந்தப் படம் 1930களின் கதைக்களத்தில் பீரியட் படமாக உருவாகிறது. மேலும், அதிகமான பொருட் செலவில் தயாராகவுள்ள 'கேப்டன் மில்லர்' பான் இந்தியா படமாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

கேப்டன் மில்லர் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு அக்டோபர் 7ம் தேதி தொடங்கவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடக்கவுள்ளதாகவும் இந்த மாதம் 21ம் தேதி 'கேப்டன் மில்லர்' படத்தின் பூஜை நடக்கும் எனவும், அதனைத் தொடர்ந்து, மேலும் சில தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!