அட்லீ கூடதான் அடுத்த படம்! அடம்பிடிக்கும் ஹிந்தி ஹீரோ!

அட்லீ கூடதான் அடுத்த படம்! அடம்பிடிக்கும் ஹிந்தி ஹீரோ!
அட்லீயுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரபல பாலிவுட் ஹீரோ அடம்பிடிக்கிறாராம்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம், 5 நாட்களில் உலகளவில் ரூ.600 கோடி வசூலை எட்டியுள்ளது. இது பாலிவுட்டில் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றியை அடுத்து, அட்லீயை பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலர் ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவுள்ளார். அந்தப் படத்தை முடித்துவிட்டு, விஜய்யுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். ஆனால், இதற்குள் சில பாலிவுட் நடிகர்கள் அட்லீக்கு பெரிய சம்பளத்தை கொடுத்து அழைக்காத தூக்கி விடுவார்களோ என்ற அச்சமும் கோலிவுட்டில் எழுந்துள்ளது.


இதற்குக் காரணம், ஆயுஷ்மான் குரானா. அவர் அட்லீயை தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் என்று கூறியுள்ளார். மேலும், தென்னிந்திய சினிமாவில் பகத் பாஸில் மற்றும் அட்லீயுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.

இதன் மூலம், கூடிய சீக்கிரமே ஆயுஷ்மான் குரானா அட்லீக்கு பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்து புக் செய்து விடுவார் என்று பேச்சுக்களும் அடிப்பட தொடங்கியுள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் தலைவர் 171 படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், விஜய் - அட்லீ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அட்லீ இன்னும் ஒரு வருஷம் அல்லு அர்ஜுன் படத்திற்காக காத்திருப்பாரா அல்லது இமிடியேட்டா ஒரு புதிய படத்தை ஆரம்பிப்பாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த கேள்விகளுக்கு விரைவில் அட்லீயிடம் இருந்து பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான் மற்றும் அட்லீ ஆகியோரின் கூட்டணி: ஷாருக்கான் மற்றும் அட்லீ ஆகியோர் இணைந்து பணியாற்றிய முதல் முறையாகும். ஷாருக்கானின் 30 ஆண்டு கால நடிப்புக்கு அட்லீ ஒரு அற்புதமான படத்தை கொடுத்துள்ளார்.

திரைக்கதை மற்றும் இயக்கம்: ஜவான் படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம் மிகவும் சிறப்பாக உள்ளன. அட்லீ தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

திரைக்கதை: ஜவான் படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. திரைக்கதையின் திருப்பங்கள் ரசிகர்களை ஈர்க்கின்றன.

இசை: ஜவான் படத்தின் இசை மிகவும் பிரபலமாக உள்ளது. படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

விளம்பரங்கள்: ஜவான் படத்தின் விளம்பரங்கள் மிகவும் பிரமாண்டமாக இருந்தன. இந்த விளம்பரங்கள் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தன.

ஜவான் படத்தின் வெற்றி, அட்லீயின் திறமைக்கு ஒரு சான்றாக உள்ளது. அவர் பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

Tags

Next Story