பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம்

பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம்
X

பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா 40 வயதில் மாரடைப்பால் இறந்தார் 

நடிகர் சித்தார்த் சுக்லா, வயது 40, மாரடைப்பால் இறந்து விட்டதாக மும்பையின் கூப்பர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் சித்தார்த் சுக்லா, மாரடைப்பால் காலமானார் என கூப்பர் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவருக்கு வயது 40.

சித்தார்த் சுக்லாவுக்கு அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர், அவர் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்தார்.

2014 ஆம் ஆண்டில், அவர் ஹம்ப்டி சர்மா கி துல்ஹானியா என்ற படத்தில் துணைப் பாத்திரத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். அவர் பிக் பாஸ் 13 ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளராக உருவெடுத்தார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்