தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த தினம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த தினம்
X

நா.முத்துக்குமார் 

கவிஞர் நா.முத்துக்குமார் பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.

கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று. இவர் பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.

இறந்துவிட்டவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடலாமா என்ற விவாதம் எப்போதும் நடைபெறுவதுண்டு. இதுகுறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியோர்கள் இறந்துவிட்ட பிறகு அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டையும் அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பை அவர்களுடைய இன்றியமையாமையை அவர்கள் விட்டுச் சென்றதால் விளைந்த இழப்பை நினைவுகூர்ந்து பெருமைப்படுத்துவது தமிழ்ச் சமூகத்தின் மரபு.

நா.முத்துக்குமார். 2016 ஆகஸ்ட் 14 அன்று யாரும் எதிர்பாராத இடியாய் வந்து விழுந்தது அவருடைய மரணச் செய்தி. ஒருவேளை இறைவன் கொஞ்சம் கருணை காட்டியிருந்தால் இன்று (ஜூலை 12) தன்னுடைய 46 -ம் பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார் முத்துக்குமார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார்.

கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் , 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். "பட்டாம்பூச்சி பதிப்பகம்" என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.

புகழ்பெற்ற இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் பலருக்கு மிகவும் நெருக்கமான பாடலாசிரியராகத் திகழ்ந்தார் முத்துக்குமார். மணிரத்னம் இயக்கிய, தயாரித்த படங்களுக்கு வாலியும் வைரமுத்துவும் மட்டுமே பாடல்களை எழுதுவார்கள். அவர் தயாரித்த 'டும் டும் டும்' படத்துக்கு முதல் முறையாக அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதினார்.

இவர் 2006 ம் ஆண்டு வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலஷ்மி என்ற மகளும் உள்ளார்.

2016 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதியன்று காலையில் தனது 41 வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!