பிக்பாஸில் மீண்டும் ஒரு பெண்..! இவங்களுக்கு ஆர்மியே தொடங்கலாமே!

பிக்பாஸில் மீண்டும் ஒரு பெண்..! இவங்களுக்கு ஆர்மியே தொடங்கலாமே!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்குள் வர இருக்கிறார் பிரபல நடிகை ஒருவர்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் இன்னும் ஒரு பெண் உள் நுழைய இருக்கிறாராம். அவருக்கு ஏற்கனவே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில், இப்போது பிக்பாஸ் வந்தால் அவருக்கென தனி ஆர்மியே உருவாகும் என்கிறார்கள்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்க பல்வேறு போட்டியாளர்களை வீட்டுக்குள் அடைத்து வைத்து 100 நாட்கள் அவர்களின் உணர்வுகளை வைத்து யார் நிலையாக இருக்கிறார் என்பதை பரிசோதிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் முடிவில் யார் மக்களின் மனதை கவர்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை பாராட்டு என கொடுக்கப்படும்.

6 சீசன்கள் முடிந்திருந்த நிலையில் இப்போது 7வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ இந்த பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு வீட்டுக்குள் பல செலிபிரிட்டிகளை அடைத்து வைத்து அவர்களுக்குள் கலகம் மூட்டி அதனைக் கொண்டு சுவாரஸ்யமாக்கி ஒளிபரப்புகிறார்கள். இதன் மூலம் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி நிகழ்ச்சியை அனைவரையும் பார்க்கும் வகையில் பேக் செய்து கொடுக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. முதல் சீசனிலிருந்தே இந்நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தில்தான் இருக்கும். தொலைக்காட்சியில் மட்டுமல்ல, ஓடிடியிலும் இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து வருவார்கள்.

  • அக்ஷயா உதயகுமார்
  • ஐசு டான்சர்
  • மாயா கிருஷ்ணன்
  • மாடல் அழகி அனன்யா ராவ்
  • பவா செல்லத்துரை
  • கூல் சுரேஷ்
  • பூர்ணிமா ரவி
  • பாரதி கண்ணம்மா விணுஷா தேவி
  • நடிகை விசித்ரா
  • பாடகர் யுகேந்திரன்
  • வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா
  • பிரதீப் ஆண்டனி
  • நிக்ஷன்
  • டான்சர் மணிச்சந்திரா
  • நடிகர் விஷ்ணு விஜய்
  • நடிகை ரவீனா
  • நடிகர் சரவணன் விக்ரம்
  • டான்சர் விஜய் வர்மா

ஆகிய 9 பெண்களும் 9 ஆண்களும் என மொத்தம் 18 பேர் கலந்து கொண்டிருந்த நிலையில் முதல் வார முடிவிலேயே எலிமினேசன் இருக்கிறது என்று சொல்லி ஷாக் அளித்தார் பிக்பாஸ். கமல்ஹாசனும் அனன்யா ராவை வெளியேற்றினார். அடுத்து பவா செல்லதுரை தாமாகவே வந்து வெளியே செல்வதாக அடம்பிடித்ததன் காரணமாக அவரையும் டீம்மேட்ஸ் இழந்து இப்போது 16 பேர் இருக்கிறார்கள்.


இந்நிலையில் அதிரடி செய்தியாக வைல்டு கார்டு என்ட்ரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வைல்டு காடில் ராஜா ராணி சீரியலில் கலக்கிய விஜே அர்ச்சனா உள்ளே வரப் போகிறாராம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!