வாடா..போடா.. ஜோவிகா..! சவுண்ட் கிழியும் பிக்பாஸ்..!

வாடா..போடா.. ஜோவிகா..! சவுண்ட் கிழியும் பிக்பாஸ்..!
X
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய நாள் இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் பிரிக்கப்பட்ட பிறகு இருவருக்குள்ளும் பயங்கரமான பிரச்னை ஓடி வருகிறது. ஒரே வீட்டில் இருந்தவரை பெரிதாக சண்டை போடாதவர்கள் கூட இப்போது முட்டிக் கொள்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கியது. இந்த முறை புதிய போட்டியாளர்கள், புதிய விதிமுறைகள், இரண்டு வீடுகள் என எல்லாம் மாறியுள்ளது. இந்த முறை ரசிகர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 1 மணி நேர எபிசோட் போக, ஓடிடியிலும் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தனர். அவர்களில் 9 பேர் ஆண்கள் 9 பேர் பெண்கள். முதல் வாரத்திலேயே எலிமினேசன் வைத்து பிக்பாஸ் அதிரடி கிளப்பினார்.

பவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா விஜயகுமார் ஆகியோர்தான் கடந்த வார எலிமினேசன் கேட்டகரிக்கு நாமினேசன் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் தங்களுக்கு பிடித்தவர்களை ரசிகர்கள் காப்பாற்ற ஓட்டு போட்டனர். இந்நிலையில் இரண்டு பேர் மிகக்குறைவான வாக்குகளைப் பெற்று எலிமினேட் ஆகும் நிலையில் இருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் வேட்பாளரான அனன்யா நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அதே நேரம் தன்னுடைய உடல் நல காரணங்களைச் சொல்லி எழுத்தாளர் பவா செல்லதுரை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஒரு நிமிடம் கூட தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என பிக்பாஸிடம் போராடி வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது வாரம் வழக்கம்போல சண்டையுடன் தொடங்கியது.

இரண்டாவது வாரத்தின் பிக்பாஸ் வீட்டு தலைவராக சரவண விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்மால்பாஸ் வீட்டில் பிரதீப், விஷ்ணு, மாயா, ஐஷு, கூல் சுரேஷ் ஆகியோர் இருக்கின்றனர்.

முதல் புரோமோ

இரு வீட்டாருக்கும் முற்றும் மோதல். வேண்டுமென்றே இருவருக்குள்ளும் சண்டையை மூட்டும் வகையில் பிக்பாஸ் செயல்பட்டு வருகிறார். இது ஆரம்பத்தில் ஃபன்னாக இருந்தாலும் தற்போது அடுத்து என்ன நடக்கும் என சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. விஷ்ணு உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள். அவர்கள் ஸ்ட்ரைக் செய்வதாக அறிவிக்கிறார்கள்.

வேலை செய்ய மாட்டோம் எனவும், சாப்பாடு தயார் செய்து தரமாட்டோம் எனவும் கொடி பிடிக்கின்றனர். இதனால் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இதனால் பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். இதற்கான முதல் அடியை யுகேந்திரன் எடுத்துச் சொல்கிறார். ஜோவிகா சில அதிருப்திகளை பதிய வைக்கிறார். பிரதீப் மீதான தனது அதிருப்தியை சொல்லி மற்றவர்களிடம் வருத்தப்படுகிறார்.

இரண்டாவது புரோமோ

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் ஜோவிகாவுக்கும், பிரதீப் ஆண்டனிக்கும் படுபயங்கரமான வாக்குவாதம் தொடங்குகிறது. இதில் விஷ்ணுவின் பங்கும் இருக்கிறது. ஸ்மால்ஹவுஸ்மேட்டான விஷ்ணு உள்பட பலரும் நாங்கள் பிக்பாஸ் வீட்டுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் எனக் கூற, மோதல் முற்றிவிடுகிறது. ஜோவிகா - பிரதீப் ஆண்டனி இருவரும் தலைமுடியைப் பிடித்து சண்டையிடாத குறையாக அடித்துக் கொள்கிறார்கள்.

பிரதீப் ஆண்டனி தங்களை அடிமை போல நடத்தக்கூடாது என்று கூறுகிறார். அதேநேரம் வாடா போடா என ஒருமையில் பேசி சண்டையைப் பெரிதாக்குகிறார் ஜோவிகா.

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் விளையாடிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள்

  • அக்ஷயா உதயகுமார்
  • ஐசு டான்சர்
  • மாயா கிருஷ்ணன்
  • கூல் சுரேஷ்
  • பூர்ணிமா ரவி
  • பாரதி கண்ணம்மா விணுஷா தேவி
  • நடிகை விசித்ரா
  • பாடகர் யுகேந்திரன்
  • வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா
  • பிரதீப் ஆண்டனி
  • நிக்ஷன்
  • டான்சர் மணிச்சந்திரா
  • நடிகர் விஷ்ணு விஜய்
  • நடிகை ரவீனா
  • நடிகர் சரவணன் விக்ரம்
  • டான்சர் விஜய் வர்மா

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள்

  • பவா செல்லதுரை (தாமாக முன்வந்து)
  • அனன்யா ராவ் (முதல் வார எலிமினேசன்)
  • இரண்டாவது வாரம் எலிமினேசன் இல்லை

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!