கொளுத்திப் போட்ட பிக்பாஸ்..! சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்கும் சண்ட!

கொளுத்திப் போட்ட பிக்பாஸ்..! சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்கும் சண்ட!
X
பிக்பாஸ் வீட்டில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒருவரையொருவர் டார்கெட் செய்து கொள்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கியது. இந்த முறை புதிய போட்டியாளர்கள், புதிய விதிமுறைகள், இரண்டு வீடுகள் என எல்லாம் மாறியுள்ளது. இந்த முறை ரசிகர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 1 மணி நேர எபிசோட் போக, ஓடிடியிலும் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தனர். அவர்களில் 9 பேர் ஆண்கள் 9 பேர் பெண்கள். முதல் வாரத்திலேயே எலிமினேசன் வைத்து பிக்பாஸ் அதிரடி கிளப்பினார்.

பவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா விஜயகுமார் ஆகியோர்தான் இந்த வார எலிமினேசன் கேட்டகரிக்கு நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தங்களுக்கு பிடித்தவர்களை ரசிகர்கள் காப்பாற்ற ஓட்டு போட்டனர். இந்நிலையில் இரண்டு பேர் மிகக்குறைவான வாக்குகளைப் பெற்று எலிமினேட் ஆகும் நிலையில் இருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் வேட்பாளரான அனன்யா நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அதே நேரம் தன்னுடைய உடல் நல காரணங்களைச் சொல்லி எழுத்தாளர் பவா செல்லதுரை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஒரு நிமிடம் கூட தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என பிக்பாஸிடம் போராடி வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது வாரம் வழக்கம்போல சண்டையுடன் தொடங்கியது.

இரண்டாவது வாரத்தின் பிக்பாஸ் வீட்டு தலைவராக சரவண விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்மால்பாஸ் வீட்டில் பிரதீப், விஷ்ணு, மாயா, ஐஷு, கூல் சுரேஷ் ஆகியோர் இருக்கின்றனர்.

சரவண விக்ரம் டேய் என்று அழைக்க அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் விஷ்ணு. இதனால் இருவருக்குள்ளும் சற்று முட்டிக்கொள்கிறது. நீ தலைவரா இல்லை எல்லாரும் தலைவரா என்று கேட்க அப்போது பிரதீப்பும் உள்ளே விவாதத்துக்குள் வர, சண்டை பெரியதாகிறது.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று, முட்டைப் பிரச்னை பெரிய பிரச்னையாக வருகிறது. இதில் வினுஷா தேவி ஆஃப் பாயில் வராதது ஏன் என்று விளக்குகிறார். இது பலருக்கும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. மேலும் பாடகர் யுகேந்திரனுக்கு இதில் பிரச்னை உருவாகிறது.

அவர் இன்சல்ட் பண்ண மாதிரி இருந்தது என்று கூறுகிறார். பலரும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வைக்க, சரவணன் விக்ரம் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.

புரோமோ 2

இன்றைய தினம் வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் இரண்டு வீட்டினரும் சண்டைக்கு தயாராகின்றனர். மறைமுகமாக இருவரும் மோதல்போக்கை கடைபிடிப்பது தெரிய வருகிறது. அதிலும் ஸ்மால்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்களை டார்கெட் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகின்றனர்.

இதில் முக்கியமான நபர் மாயா. இவர் இரிடேட் செய்துவிட்டதால் நிக்சன் இவரை நிச்சயம் டார்கெட் செய்வார் என கூறுகிறார். இதனால் நம்மில் ஒருவர் லீடர் ஆக வேண்டும் என்று கூடி திட்டமிடுகின்றனர். விஷ்ணுவும் மாயாவும் இதில் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றனர். இதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் பிரதீப் கொஞ்சம் வித்தியாசமாக சிரிக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் மெஜாரிட்டி அதிகம் என்று விஷ்ணு, பிரதீப்பிடம் கூறுகிறார். அவரையும் தங்களது கூட்டணிக்குள் அழைக்கிறார். 8 பேர் 6 பேரை அடிக்குறது மோசம் என்பது போல அவர்கள் பேசுகிறார்கள்.

அடுத்து மாயா நம்ம பாய்ண்ட்ஸ் எதையும் அவங்ககிட்ட சொல்லக்கூடாது என்று கூறுகிறார். அதற்கு விஷ்ணு நான் ஏன் சொல்லப்போறேன் என்று தெரிவிக்கிறார்.

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் விளையாடிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள்

அக்ஷயா உதயகுமார்

ஐசு டான்சர்

மாயா கிருஷ்ணன்

கூல் சுரேஷ்

பூர்ணிமா ரவி

பாரதி கண்ணம்மா விணுஷா தேவி

நடிகை விசித்ரா

பாடகர் யுகேந்திரன்

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா

பிரதீப் ஆண்டனி

நிக்ஷன்

டான்சர் மணிச்சந்திரா

நடிகர் விஷ்ணு விஜய்

நடிகை ரவீனா

நடிகர் சரவணன் விக்ரம்

டான்சர் விஜய் வர்மா

Tags

Next Story