ரவீனா செய்த காரியம்..! கடும் கோபத்தில் மணி! பிளவு

ரவீனா செய்த காரியம்..! கடும் கோபத்தில் மணி! பிளவு
X
பிக்பாஸ் சீசன் 7, நாள் 24ன் புரோமோ வெளியாகியுள்ளது.

இந்த வாரம்

பிக்பாஸ் வீட்டிலிருந்து விஜய் வெளியேற்றப்பட்ட பிறகு கேப்டன் பூர்ணிமா, ஸ்மால் பாஸ் வீட்டுக்கு யார் யார் செல்ல வேண்டும் என தேர்வு செய்தார். மொத்தம் 6 பேரை அவர் தன்னை கவராதவர்கள் பட்டியலில் சேர்த்து ஸ்மால்பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

பூர்ணிமா தேர்வு செய்த 6 பேர்

யுகேந்திரன்

ஜோவிகா

நிக்ஸன்

பிரதீப்

அக்ஷயா

மணி

நிக்ஸனுக்கும் ஐஸுவுக்கும் ஒரு டிராக் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் நிக்ஸனுக்கு ஐஸு பணிவிடை செய்த சில காட்சிகளையும் பார்க்க முடிந்தது. நிக்ஸனின் பெட்டியை ஐஸு சுமந்து சென்று ஸ்மால்பாஸ் வீட்டில் கொண்டு வைத்தது,அவரை வழியனுப்பி வைத்தது என இருக்கும்போது தன்னை மிஸ் பண்றியா என்று நிக்ஸன் கேட்க, அவரும் அதனை வெளிக்காட்டினார்.

நாமினேஷன் லிஸ்ட்

விஷ்ணு

மணி

பிரதீப்

மாயா

வினுஷா

அக்ஷயா

கூல் சுரேஷ்

ஜோவிகா

நிக்ஸன்

விக்ரம்

யுகேந்திரன்

பிரதீப் Vs விஷ்ணு

பிரதீப்புக்கும் விஷ்ணுவுக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, பிரதீப் பேசியதையெல்லாம் விஷ்ணு நடுவீட்டில் போட்டு உடைத்துவிடுகிறார். விசித்திரா பற்றி பேசிய பிரதீப், இதனால் கொஞ்சம் அதிருப்தியடைகிறார். ஆனாலும் விசித்ரா இதுகுறித்து எதுவும் பேசாமலே அமர்ந்திருக்கிறார்.

நிக்ஸன் - ஐஸூ

ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கும் நிக்ஸன், ஐஸுவுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த ரவீனா இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நினைக்கிறார். தற்செயலாக அந்தப் பக்கம் சென்று பார்ப்பதுபோல நடித்து ஸாரிங்க நீங்க பேசிட்ருக்கும்போது வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன் என சொல்கிறார். ரவீனா நிக்ஸன் இருக்கும் இடத்துக்கு போவது, மணிக்கு கொஞ்சம் காண்டாக இருக்கிறது.

ரவீனா - மணி

மணி இதனை மனதில் வைத்துக்கொண்டு நிக்ஸனுடன் பேசி முடிச்சாச்சா என்று கேட்கிறார். அது எனக்கு பர்சனல் என்று ரவீனா சொல்ல மேலும் காண்டாகிறார் மணி. ரொம்ப பொசஸிவாக மாறிய மணி சோகமே உருவாக படுத்து கிடக்கிறார்.

நிக்ஸனும் ரவீனாவும் பேசிக் கொள்கிறார்கள். நிக்ஸன் தனக்கும் ஐஸுவுக்கும் இருப்பது நட்பு மட்டும்தான் என்று சொல்கிறார். இதற்கு பதிலளிக்கும் ரவீனா, நீ என்னையும் மணியையும் சேர்த்து வச்சி பேசுனியே அது எப்படி இருக்கும் எங்களுக்கு என சொல்லி, இதுவும் அதுமாதிரிதான் என்று சொல்லிவிடுகிறார்.

விக்ரம் - பூர்ணிமா - விஷ்ணு

விஷ்ணுவிடம் மாயா அதிரிபுதிரி கேள்வி ஒன்றை கேட்க, வெளிப்படையாக பூர்ணிமா வெளியேறினால் நான் அழுவேன் என்று சொல்கிறார் விஷ்ணு. ஆனால் பூர்ணிமாவோ விக்ரமுடன் தனியே பேசிக் கொண்டிருக்கிறார். ரகசியமாக இருவரும் பேசிக் கொள்வதை விரும்புகிறார்கள். விக்ரம் நீ ரொம்ப அழகா இருக்க என பூர்ணிமா பேசுவதை பிக்பாஸ் கேமிரா மூலம் படம்பிடித்து காட்டிவிடுகிறார்.

பேட்டரி டெட்

வெற்றி பெறுபவர்களுக்கு 2 கோல்டு ஸ்டார் கிடைக்கும் என்ற அறிவிப்புடன் டாஸ்க் தொடங்குகிறது.

ஐஸுவால் பிரச்னை ஒன்று வெடிக்க, அதனால் அக்ஷயாவும் விஷ்ணுவும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். போட்டியின் முடிவில் ஜோவிகா வெற்றி பெறுகிறார்.

புரோமோ 1

இன்றைய முதல் புரோமோவில் கோல்டு ஸ்டார் 2 டாஸ்க் வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் ஒரு வீடியோ அனுப்பியிருப்பார்கள். அவர்களது வீடியோக்களை பார்த்து லைக், டிஸ்லைக் கொடுக்கவேண்டும். அதாவது ஒரு போட்டியாளர் மற்ற இரண்டு போட்டியாளர்களின் வீடியோவைப் பார்த்து லைக், டிஸ்லைக் கொடுக்க வேண்டும். இதில் வெற்றிபெறுபவருக்கு கோல்டு ஸ்டார்.

ரவீனா, மணிக்கு டிஸ்லைக் கொடுக்க இதனால் மணி பயங்கர அப்செட் ஆகிவிடுகிறார். இருவருக்குள்ளும் ஒரு சின்ன இடைவெளி உருவாகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!