செய்வதறியாது முழிக்கும் சரவண விக்ரம்...!

செய்வதறியாது முழிக்கும் சரவண விக்ரம்...!
X
பிக்பாஸின் இரண்டாவது வாரம் சண்டையும் குழப்பமுமாகவே சென்றுகொண்டிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கியது. இந்த முறை புதிய போட்டியாளர்கள், புதிய விதிமுறைகள், இரண்டு வீடுகள் என எல்லாம் மாறியுள்ளது. இந்த முறை ரசிகர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 1 மணி நேர எபிசோட் போக, ஓடிடியிலும் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தனர். அவர்களில் 9 பேர் ஆண்கள் 9 பேர் பெண்கள். முதல் வாரத்திலேயே எலிமினேசன் வைத்து பிக்பாஸ் அதிரடி கிளப்பினார்.

பவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா விஜயகுமார் ஆகியோர்தான் இந்த வார எலிமினேசன் கேட்டகரிக்கு நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தங்களுக்கு பிடித்தவர்களை ரசிகர்கள் காப்பாற்ற ஓட்டு போட்டனர். இந்நிலையில் இரண்டு பேர் மிகக்குறைவான வாக்குகளைப் பெற்று எலிமினேட் ஆகும் நிலையில் இருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் வேட்பாளரான அனன்யா நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அதே நேரம் தன்னுடைய உடல் நல காரணங்களைச் சொல்லி எழுத்தாளர் பவா செல்லதுரை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஒரு நிமிடம் கூட தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என பிக்பாஸிடம் போராடி வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது வாரம் வழக்கம்போல சண்டையுடன் தொடங்கியது.


இரண்டாவது வாரத்தின் பிக்பாஸ் வீட்டு தலைவராக சரவண விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்மால்பாஸ் வீட்டில் பிரதீப், விஷ்ணி, மாயா ஐஷு, கூல் சுரேஷ் ஆகியோர் இருக்கின்றனர்.

சரவண விக்ரம் டேய் என்று அழைக்க அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் விஷ்ணு. இதனால் இருவருக்குள்ளும் சற்று முட்டிக்கொள்கிறது. நீ தலைவரா இல்லை எல்லாரும் தலைவரா என்று கேட்க அப்போது பிரதீப்பும் உள்ளே விவாதத்துக்குள் வர, சண்டை பெரியதாகிறது.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று, முட்டைப் பிரச்னை பெரிய பிரச்னையாக வருகிறது. இதில் வினுஷா தேவி ஆஃப் பாயில் வராதது ஏன் என்று விளக்குகிறார். இது பலருக்கும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. மேலும் பாடகர் யுகேந்திரனுக்கு இதில் பிரச்னை உருவாகிறது.

அவர் இன்சல்ட் பண்ண மாதிரி இருந்தது என்று கூறுகிறார். பலரும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வைக்க, சரவணன் விக்ரம் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் விளையாடிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள்

  • அக்ஷயா உதயகுமார்
  • ஐசு டான்சர்
  • மாயா கிருஷ்ணன்
  • கூல் சுரேஷ்
  • பூர்ணிமா ரவி
  • பாரதி கண்ணம்மா விணுஷா தேவி
  • நடிகை விசித்ரா
  • பாடகர் யுகேந்திரன்
  • வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா
  • பிரதீப் ஆண்டனி
  • நிக்ஷன்
  • டான்சர் மணிச்சந்திரா
  • நடிகர் விஷ்ணு விஜய்
  • நடிகை ரவீனா
  • நடிகர் சரவணன் விக்ரம்
  • டான்சர் விஜய் வர்மா

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!