Biggboss Nixen யார் இந்த பிக்பாஸ் நிக்சன்?

Biggboss Nixen யார் இந்த பிக்பாஸ் நிக்சன்?
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நுழைந்த நிக்சன் பற்றிய தகவல்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ ஆகிய பிக்பாஸ் சீசன் 7 இன்று முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் நிக்சன் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

பிக்பாஸ் நிக்சன் யார்?

சென்னை பிறந்த நிக்சன் நடிப்பின் மீது தீராத ஆர்வத்தில் இருந்தவர். பல முயற்சிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த திமிரு பிடிச்சவன் படத்தின் மூலம் வெளிவுலகத்துக்கு தெரியவந்தார். ஆனாலும் அவருக்கு நடிப்பால் பெரிய பிரபல்யம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் தனது சொந்த பாடல்களை எழுத ஆரம்பித்து பின் ராப்பர் செய்து கடந்த பிக்பாஸ் முகேன் ராவுடன் சேர்ந்து ஒரு பாடல் பணிபுரிந்திருக்கிறார்.

ஒத்த தாமர என்று தொடங்கும் பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. அதில் வரும் ராப் பகுதியை பாடியவர் நிக்சன்தான்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நிக்சன்

நிக்சன் தனது ராப் செய்யும் திறமை மூலம் மக்களை கவர விரும்புகிறார். பிக்பாஸ் வீட்டில் முதல் இரு வாரங்கள் தங்கியிருந்து மற்றவர்களை உன்னிப்பாக கவனித்து அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசிப்பதாக கமல்ஹாசனிடம் கூறினார். ஆனால் அத்தனை நாள்கள் அவகாசம் கிடைக்குமா என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நிக்சன் நுழைந்ததை அடுத்து, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டு கேப்டனாக தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீப் ஆண்டனியிடம் வாக்குவாதம் செய்து தனக்கு அந்த பட்டயத்தை தரச் சொல்லி கேட்கிறார். ஆனால் தனது வாதத் திறமையால் பிரதீப் ஆண்டனிதான் ஜெயிக்கிறார்.

பிக்பாஸ் நிக்சனின் வருகை பிக்பாஸ் சீசன் 7-க்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் விவரங்கள்

பிக்பாஸ் சீசன் 7 இன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஆண் போட்டியாளர்கள்:

  • விஜய் வர்மா
  • சரவண விக்ரம்
  • கூல் சுரேஷ்
  • யுகேந்திரன்
  • நிக்சன்
  • பிரதீப் ஆண்டனி
  • மணி சந்திரா
  • விஷ்ணு விஜய்
  • பாவா செல்லத் துரை

பெண் போட்டியாளர்கள்:

  • ஐஷு விசித்ரா
  • ரவீனா
  • பூர்ணிமா ரவி
  • ஜோவிகா
  • வினுஷா தேவி
  • அக்ஷயா உதயகுமார்
  • மாயா கிருஷ்ணன்
  • அனன்யா ராவ்

இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ரூல்ஸுகளும் மாற்றப்பட்டிருக்கின்றன. என்ன மாதிரியான ரூல்ஸ்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு