பிக்பாஸில் Mid-Week எலிமினேஷன்! வெளியேறியது யார் தெரியுமா?

பிக்பாஸில் Mid-Week எலிமினேஷன்! வெளியேறியது யார் தெரியுமா?
X
பிக்பாஸில் Mid-Week எலிமினேஷன்! வெளியேறியது யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென ஒருவர் எலிமினேட் ஆகியிருக்கிறார். இதனால் பிக்பாஸ் வீடே அதிர்ச்சியடைந்துள்ளது. ரசிகர்களும் இந்த எதிர்பாராத டிவிஸ்ட்டால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் அதிக டிஆர்பி பெறும் நிகழ்ச்சி இந்த பிக்பாஸ். இதுவரை 6 சீசன்களைக் கடந்து இப்போது 7வது சீசனில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் எப்போதும் இல்லாத வகையில் பல புதுமைகளை படைத்து வருகிறது.

இரண்டு வீடு, தனித்தனி ரூல்ஸ், இரு வீடுகளுக்கிடையேயும் போட்டி என அசத்தலான எபிசோட்களை ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அதேநேரம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் லைவ் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பல்வேறு விசயங்களை காட்டி வருகின்றனர். தொலைக்காட்சியில் காட்டப்படாத பல விசயங்களை லைவில் முன்கூட்டியே அறிய முடிகிறது.

வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்ததும் போட்டி வேற லெவலுக்கு மாறியது. அடுத்து டபுள் எலிமினேசன், இப்போது மிட் வீக் எலிமினேசன் என புதுமையைப் புகுத்தியுள்ளனர்.

இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்து அனைவருக்கும் ஷாக் அளித்துள்ளார் பிக்பாஸ். நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்கள் முகத்தைக் கொண்ட பிளாக்குகள் இருக்கும். அதை சரியாக அடுக்க வேண்டும். அதில் யார் முகம் முழுமை அடையவில்லையோ அவர்தான் எலிமினேட் ஆவார் என்று கூறப்படுகிறது. அனன்யா தான் இதில் எலிமினேட் ஆக இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய நாள் ஹைலைட்ஸ்:

விஷ்ணுவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையில் பிரச்னை வந்துவிடுகிறது. இதனால் அர்ச்சனா இருவருக்கும் சமாதானம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால் விஷ்ணு இதை தானே பேசி தீர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். பின் அர்ச்சனா அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

பூர்ணிமாவிடம் விஷ்ணு தன்னுடைய பிரச்னையை பேசி தீர்க்கிறார். உங்களை ஹர்ட் பண்ண நினைக்கவில்லை, அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என விஷ்ணு சொல்லிவிடுகிறார். பின் பூர்ணிமாவும் தான் ஹர்ட் பண்ண நினைக்கவில்லை என்று தெரிவிக்கிறார்.

உங்களுக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டால், அதை வெறும் சண்டையாக நினைக்காமல் என்னை பழிவாங்க நினைக்கிறீர்கள். நீங்கள், தினேஷ் போன்றோர் இப்படித்தான் நினைக்கிறீர்கள். ஏன் வெளியில் சென்று நீங்கள் பேசுவீர்களா என்று கூட தெரியாது. இன்னும் எத்தனை வாரங்கள் இருக்கப் போகிறோம். நீங்கள் டீம் சேர்ந்து என்ன செய்கிறீர்கள் என்பது தெரியும் எனக்கு என்று சொன்னதும் உடனடியாக கிளம்பிவிடுகிறார் விஷ்ணு.

பெட்ரூமில் சென்று படுத்துக் கொள்கிறார் விஷ்ணு. இதனால் பூர்ணிமா கவலையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மாயா, பூர்ணிமாவை கலாய்க்கிறார்.

விக்ரமும் அர்ச்சனாவும் தங்களுக்குள் இருக்கும் பிரச்னையை பேசி தீர்க்கின்றனர். தனியாக இருக்கும்போது ஸாரி கேட்கவேண்டும் என்று நினைத்து கேட்டதாக சொல்கிறார் அர்ச்சனா.

மீண்டும் விஷ்ணு, பூர்ணிமா சாப்பிடும்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிஜமாகவே கோபம் வரும்போது நான் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை என்று பூர்ணிமா சொல்ல, விஷ்ணு என்னிடம் வந்து பேசினாலே போதும் என்று பேசுகிறார். சண்டை போட்டால் எதிரி கூட கூட சேர்ந்து உட்காருகிறீங்கள். ஆனால் என்னை நண்பர் என்று சொல்லி என்னிடம் வந்து பேசிக்கொள்ள மாட்டீர்களே? என்று சொல்கிறார் பூர்ணிமா.

பேசுனா எல்லாமே சரியாகிவிடும். ஆனால் நீங்கள் பேசவே மாட்டீர்களே என்று விஷ்ணுவிடம் பூர்ணிமா சொல்கிறார். மாயா தன்மீது கோபத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்.

மாயா, விஷ்ணுவைப் பற்றி கலாய்த்துக் கொண்டிருக்கிறார். பூர்ணிமாவை அழைத்து அவரையும் கலாய்க்கிறார். விஷ்ணுவும் அங்கே வந்து அனன்யா, மாயாவிடம் ஸாரி கேட்டுக் கொண்டிருக்கிறார். மாயா திரும்ப திரும்ப விஷ்ணு பற்றி பூர்ணிமாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஈஸி டேக்கிங் கேர்ள் என்பதாக நீங்கள் இருக்கிறார்கள். பூர்ணிமா மாயாவின் பேச்சைக் கேட்பதாகவே தெரிகிறது.

விசித்ராவும் கூல் சுரேஷ் பற்றி பேசி மன்னிப்பு கேட்கிறார். மனிதனோட உணர்வுகள் உங்களுக்கு என்னை நாமினேசன் செய்வதற்குதான் தேவைப்படுகிறதா என கூல் சுரேஷ் வருத்தப்படுகிறார். விசித்ரா அதற்கும் மன்னிப்பு கேட்கிறார். பின் கூல் சுரேஷ் கேமரா முன் வந்து நான் வெளியே கிளம்பலாம் என்று இருக்கிறேன். குடும்பத்தை மிஸ் செய்வதாகவும், மழை வெள்ளம் வரும்போது நான் உள்ளே இருந்திருக்கிறேனே என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் மாயா, விஷ்ணு பற்றி பூர்ணிமாவிடம் பேச, மாயாவும் பூர்ணிமாவும் விக்ரமிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பூர்ணிமா மாயா பக்கமும் வர முடியாமல், விஷ்ணு பக்கமும் போக முடியாமல் தவிக்கிறார். மாயாவும், விக்ரமும் மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் இது பூர்ணிமாவை மேலும் காயப்படுத்துகிறது. அதன்பிறகுதான் இது வேண்டுமென்றே விளையாட்டாக செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

விஷ்ணுவும், நிக்ஷனும் அர்ச்சனாவின் நடிப்பை சரியாக கண்டுபிடித்து விட்டதாக பேசிக் கொள்கிறார்கள். அர்ச்சனா தான் திருந்திவிட்டதாக சொல்லி அழகாக தன்னை நிரூபித்துக் கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!