வனிதா வீட்டில் நடந்த பார்ட்டி.. யார்லாம் இருக்கா பாருங்க..!

வனிதா வீட்டில் நடந்த பார்ட்டி.. யார்லாம் இருக்கா பாருங்க..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எலிமினேட் ஆனவர்களில் சிலர் வனிதா வீட்டில் சந்தித்துள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எலிமினேட் ஆனவர்களில் சிலர் வனிதா வீட்டில் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பயங்கரமாக வைரல் ஆனவர் வனிதா. நெகடிவ் விமர்சனங்களாக இருந்தாலும் அதனை வைத்தே பிரபலமடைந்தார் அவர். இந்நிலையில், அவர் தனது மகளையும் உள்ளே அனுப்பி பிரபலமாக்க முயற்சி செய்தார்.

நடிகை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் சரியாக மக்களை கவராமல் 63ம் நாளே எலிமினேட் ஆகி விட்டார். இதற்கு காரணம் அவரைச் சுற்றி எப்போதும் நெகடிவ் எனர்ஜியாக இருந்ததே. மேலும் அவர் கல்வி குறித்து பேசி மிகவும் பிரபலமானார். ஆனால் நெகடிவ்வாக அவரைப் பற்றி புரமோட் செய்து கொண்டதன் விளைவாக பயங்கரமான எதிர்ப்புகளைச் சந்தித்தார்.

பல முற்போக்கு கருத்துக்களை பேசியதாலும் சமூகத்தில் இருக்கும் பழமை வாதம் நிறைந்த வர்களிடம் எதிர்ப்புகளைச் சந்தித்திருந்த மாயா, பூர்ணிமா போன்ற போட்டியாளர்களிடம் அதிகமாக நெருங்கி இருந்ததாலும், தன் சுயத்தை இழந்ததாக நினைத்த மக்கள் அவரை வெளியேற்றினர். அவருக்கு பிறகு பல வாரங்களில் பல போட்டியாளர்கள் வெளியே சென்றுவிட்டனர்.

விக்ரம், ரவீனா, விசித்ரா என பலரும் அடுத்தடுத்து வெளியே சென்றுவிட்டனர். தற்போது ஷோ இறுகி கட்டத்தில் இருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் வெளியில் வந்து இருக்கிறார்கள். குறிப்பாக பூர்ணிமா சமீபத்தில் 16 லட்சம் பண பெட்டி உடன் வெளியேறிவிட்டார். இது சிறந்த தேர்வாகவே பலரும் நினைக்கின்றனர். எப்படியும் அவர் போட்டியின் வெற்றியாளராக மாட்டார் என்பதே பலரும் அனுகூலம்.

வனிதா வீட்டில் பார்ட்டி

இந்நிலையில் வெளியில் வந்த போட்டியாளர்களை அழைத்து நடிகை வனிதா விஜயகுமார் பார்ட்டி கொடுத்திருக்கிறார். இரவு விருந்தில் அனைவரையும் தன் வீட்டில் உபசரித்திருக்கிறார் வனிதா விஜயகுமார். அதில் பூர்ணிமா, நிக்சன், சரவணா விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். பார்ட்டியில் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தனர்.

வனிதா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஒரு போட்டோஷூட்டில் பங்கேற்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வனிதா போட்டியாளர்களை அழைத்து பார்ட்டி கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அவர்கள். இந்த பார்ட்டி பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!