'சிறைச்சாலை பூஞ்சோலையா?'- அசீமை கலாய்க்கும் நெட்டிசன்கள்
bigg boss tamil season 6 - பிக்பாஸ் வீட்டில் ‘சிறைப்பறவை’யான அசீம்.
bigg boss today episode review, bigg boss tamil season 6- பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிய அசீம், பொம்மை டாஸ்க் விளையாட்டில் இவரது செயல்பாடு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தது. இதையடுத்து அசீம், ஷிவின் இருவரையும் மறு உத்தரவு வரும்வரை சிறைக்கு செல்ல பிக்பாஸ் உத்தரவிட்டார். இதையடுத்து, அதற்குரிய கருப்பு கோடு போட்ட வெள்ளை நிற பிரத்யேக உடையுடன் இருவரும் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், 'இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன், சிறைச்சாலை எனக்கு பூஞ்சோலை' என்று அசீம் தெரிவித்தார். இவரது சிறைவாசம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இவரை நெட்டிசன்கள் கலாய்த்து 'ட்ரோல்' செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின், அடுத்தடுத்த சம்பவங்கள் ஓவர்லோடு ஆகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த வித்தியாசமான 'டாஸ்க்'குகளுடன் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற பொம்மை டாஸ்க் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
போட்டியாளர்கள் அனைவரும் பொம்மைகளுக்காக அடித்துக் கொண்ட சம்பவங்களை பார்க்க முடிந்தது. இதில் முக்கியமான போட்டியாளராக அசீம், மற்ற போட்டியாளர்களுடன் அதிகமாக முட்டி மோதினார். குறிப்பாக, தனலட்சுமியிடம் கடும் சண்டையில் ஈடுபட்டார். விக்ரமனுடன் வாக்குவாதம் செய்தார். குறிப்பாக, எல்லோருக்கும் பிடித்த போட்டியாளரான அமுதவாணனை ஏகவசனத்தில், கிண்டலடித்து பேசியது அங்கிருந்த சக போட்டியாளர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களையும் திகைப்படைய செய்தது. ராமராஜ், சத்யராஜ் போன்ற அமுதவாணன் நடிப்பை பரிகசித்து பேசியதோடு, மன அமைதி, யோகா, தியானம் பற்றி அவர் மற்றவர்களுக்கு அறிவுறுத்துவதையும் அசீம், படுமோசமாக விமர்சித்து பேசினார்.
இந்நிலையில், பொம்மை டாஸ்க் போட்டியை அடுத்து, ஷிவினுடன் அசீமும், பிக்பாஸ் சிறைக்கு செல்ல பிக்பாஸ் உத்தரவிட்டார்.
இதையடுத்து அதற்கான உடையுடன் இருவரும் சிறைக்கு சென்றனர். அப்போது, 'நான் இதற்கெல்லாம் அசர மாட்டேன், சிறைச்சாலை எனக்கு பூஞ்சோலை' என்று மைனா நந்தினியிடம் அவர் தெரிவித்தார். அசீமின் மோசமான நடவடிக்கைகளால் அவர்மீது ரசிகர்களுக்கு அதிகமான வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிறைக்கு சென்றது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.
இதையடுத்து பல்வேறு மீம்ஸ்களால் அவரை கலாய்த்து வருகின்றனர். அவர் சிறையில் இருந்தபடி ஒன்று, இரண்டு என்று எண்ணும்படியாக வீடியோவை பகிர்ந்து அதை கவுண்டமணி -செந்தில் காமெடியுடன் இணைத்து அசீமை கலாய்த்துள்ளனர். இது போன்ற அதிகமான மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.
அசீம் பொம்மை டாஸ்கில் மட்டுமின்றி, மற்ற நேரங்களிலும் அனைத்து போட்டியாளர்களிடமும் மிகவும் மோசமாக நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் தனலட்சுமியின் நெஞ்சில் கைவைத்து அவரை தள்ளி விட்டதும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது டாஸ்க்குகளை நிறைவேற்ற, நியாயமற்ற முறைகளில் நடந்துக் கொள்வதை பார்க்க முடிகிறது. இவ்வாறு செயல்படும் போட்டியாளர்கள் உடனடியாக ரசிகர்களின் கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், தொடர்ந்து ரசிகர்களின் வெறுப்பை அசீம் சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu