பரபரப்புக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் களம்! வேற லெவல் பஞ்சாயத்து காத்திருக்கு...!

பரபரப்புக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் களம்! வேற லெவல் பஞ்சாயத்து காத்திருக்கு...!
X
பரபரப்புக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் களம்! வேற லெவல் பஞ்சாயத்து காத்திருக்கு...!

விஜய் டிவியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார இறுதியில் மிகப் பெரிய பஞ்சாயத்தே கிளம்பும் போல் தெரிகிறது. ஏற்கனவே வீட்டில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி நன்றாக ஆடி வந்த பிரதீப்பை வெளியேற்றி விட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வீட்டில் வேறு சில பஞ்சாயத்துகளும் திடீரென்று வெடித்துள்ளன.

பிக்பாஸ் கோர்ட் டாஸ்க் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் பிக்பாஸ். அதில் ஹவுஸ்மேட்ஸ் என்ன வழக்கு கொண்டு வருகிறார்கள் என்பதையும் அதை தீர விசாரித்து அதற்கு ஏற்ற தீர்ப்பை பெறும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட இந்த டாஸ்கில், கேப்டனாக இருந்த மாயா மீது விசித்ரா குற்றம் சாட்டுகிறார்.

மாயா அதே குற்றச்சாட்டை விசித்ரா மீது சுமத்துகிறார். விசித்ராவின் புகார் தன்னுடைய கேப்டன்ஸியை தவறாக துஸ்பிரயோகம் செய்கிறார் என்று மாயாவை நோக்கி குற்றம் சுமத்த, மாயாவோ தன்னை கேப்டனாக செயல்படவிடமாட்டேன் என்கிறார் என விசித்ராவை நோக்கி குற்றத்தை சாட்டுகிறார்.

போட்டியாளர்களிடையே காரசாரமான விவாதங்கள் தொடங்கி நடைபெற்றது. மாயாவைப் போலவே கானா பாலாவும் விசித்ரா மீது குற்றம் சுமத்துகிறார்.

ஜோவிகா, அர்ச்சனா மீது புகார் ஒன்றை அளிக்கிறார். தினேஷ் மாயா மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கத் தொடங்குகிறார்.

இதனிடையே விஷ்ணுவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையே தீ பற்றிக் கொண்டு எரிய அது பூதாகரமாக பெரிய சண்டையாகிறது.

நீதி வென்றதா சூழ்ச்சி வீழ்ந்ததா என முதல் புரோமோ முடிவடைகிறது.

இரண்டாவது புரோமோ

பூர்ணிமா, அர்ச்சனா மீதும் விசித்ரா மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்குவதாக காட்டப்படுகிறது. சாப்பாட்டில் ரிவெஞ்ச் எடுக்கிறார்கள் என ஒரு மோசமான குற்றச்சாட்டை எடுத்து வைக்கிறார் பூர்ணிமா.

அதற்கு விசித்ரா அர்ச்சனா கிட்ட பிரச்னை இல்ல அவர்களுக்கு சமையல் தெரியாதது பிரச்னையா என கேட்கிறார். இதுல குக்கிங் தெரியலங்குற பிரச்னையே கிடையாது. நான் எதற்காக உங்களைப் பழிவாங்க வேண்டும் என விசித்ரா கேட்கிறார்.

பூர்ணிமா - விசித்ரா வெற்றி யாருக்கு?

மூன்றாவது புரோமோ

பிராவோ இந்த முறை ஒரு டாஸ்கை வாசிக்கிறார். இது கேள்வி டாஸ்க் எனவும், பில்லிங் குறித்து ஏதோ ஒரு முக்கியமான கட்டுப்பாடு வரப் போவது தெரிகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!