கொதித்தெழுந்த விக்ரம்..! விடாமல் பிடித்த விஜய்..!

கொதித்தெழுந்த விக்ரம்..! விடாமல் பிடித்த விஜய்..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 3 வது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 3

யார் யாரை டார்கெட் செய்து இவருக்கு கோல்டன் ஸ்டார் கிடைக்கக் கூடாது என்று பேசும்படி பிக்பாஸ் சொன்ன டாஸ்க்கை வெற்றிகரமாக பலரும் பேசி வருகின்றனர். விக்ரம் இம்முறை அர்ச்சனாவுக்கு எதிராக சில விசயங்களைக் கூற விஜய்யும் அதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க, பூர்ணிமாவும் விக்ரமுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார்.

நேற்றைய ஹைலைட்ஸ்

விஷ்ணு மற்றும் விசித்ரா இருவருக்கும் ஆரம்பத்திலேயே முட்டிக் கொள்கிறது. விசித்ரா விஷ்ணுவை நாமினேட் செய்வதாக கூறுகிறார். அதற்கு அடுத்த வாரம் வரை நீங்கள் இருப்பீர்களா என சொல்கிறார் விஷ்ணு.

மாயா, பூர்ணிமா மேனிபுலேட் செய்வதாகவும், அவர்கள் அணியில் இருந்தால் அடுத்தடுத்து வெளியில் செல்வதாகவும் விஷ்ணு தெரிவித்ததாக மாயாவிடம் விசித்ரா கூறுகிறார்.

டாஸ்க்கில் மனிதத்தனம் போயி, மிருகத்தனம் வந்துவிடுகிறதே என்று விசித்ரா சொல்கிறார். விஷ்ணுவும் அதை ஆமோதிக்கிறார். அதேநேரம் விஷ்ணுவை பூர்ணிமா ஆதரித்து கேப்டனாக உதவி செய்தார், ஆனால் விஷ்ணு அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு எதிராக நடக்கிறார் என விசித்ரா சொல்ல, விஷ்ணு மறுக்கிறார். அதேசமயம் நிக்ஷனுக்கு மாறி மாறி ஸ்ட்ரைக் கொடுக்க பெல் அடித்தவர்கள் விஷ்ணுவுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கிறார் விசித்ரா.

விஷ்ணு தன்னிடம் பிளான் பி இருப்பதாகவும், அப்படி செய்தால் பார்த்துக்கொள்வேன் எனவும் சொல்ல, விசித்ரா நிக்ஷனை புகழ்ந்து பேசுகிறார். அவர் சிறப்பாக விளையாடினார் தனது கேப்டன் பதவியை சரியாக பயன்படுத்தி, தன்னை ஸ்ட்ராங் கண்டெஸ்ட்டென்டாக மாற்றிக் கொண்டார் என பேசினார்.

விசித்ரா பேசிக் கொண்டிருக்கும்போதே அர்ச்சனா உள்ளே வருகிறார். ஆனால் விஷ்ணுவுக்கும் விசித்ராவுக்கும் முட்டிக் கொள்ள அவர் வெளியே சென்று அனைவரிடமும் எனக்கு வாய்ப்பு தரவேண்டும் டாஸ்க் செய்வதற்கு என்று கூறிவிட்டு கேமராவிடம் சென்று அழ ஆரம்பிக்கிறார்.

விஷ்ணு, தன்னை வயதானவர் என்று என்னால் சைக்கிள் ஓட்ட முடியாது என்று சொல்கிறார் என பிளேட்டை திருப்பி போடுகிறார். மாயாவிடம் இப்படி சொல்லிவிட்டு தனக்கு ஆதரவு தரகேட்கிறார். ஆனால் மாயா தன்னால் முடியாது தன் மனதுக்கு எது சரி என படுகிறதோ அதையே செய்வேன் என்று கூறினார்.

விஷ்ணுவுக்கும் நிக்ஷனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. வேண்டும் என்றே தட்டு கழுவும் விசயத்தில் பூர்ணிமா தன்னை மதிக்கவில்லை என்று விஷ்ணு சொல்கிறார். மேலும் நிக்ஷனையும் வினுஷாவையும் பற்றி மீண்டும் நினைவுப்படுத்தும் வகையில், விஷ்ணு பேசிக்கொண்டிருக்கிறார். இது வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவுப்படுத்தும் வகையில் விஷ்ணு பேசுவதாக நிக்ஷன் நினைக்கிறார்.

விஷ்ணு வேண்டுமென்றே நிக்ஷனை வம்புக்கு இழுக்கிறார். விஷ்ணுவும் அர்ச்சனாவும் இணைந்து அமர்க்களமாக ஜாய்ண்ட் அடிக்கிறார்கள். ஜால்ரா அடிக்கிறார் என்று நிக்ஷன் சொல்கிறார். அர்ச்சனா, நிக்ஷன் இடையே வாக்குவாதம் மிகப் பெரிய அளவில் வெடிக்கிறது.

அர்ச்சனாவும் விஷ்ணுவும் தற்போது சேர்ந்துவிட்டார்கள் என்றும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஜால்ரா தட்டிக்கொள்கிறார்கள். அர்ச்சனா ஃபிட் ஃபார் நத்திங் என்று கூறுகிறார். மிகப்பெரிய அளவில் இந்த பிரச்னை வெடிக்கிறது.

அர்ச்சனா திட்டமிட்டு பிரச்னையை பெரிதாக்கி நிக்ஷன் கோபத்தைத் தூண்டி விடுகிறார். நிக்ஷனும் அவசரப்பட்டு கோபத்தில் வார்த்தைகளை விடுகிறார். ரவீனாவும் மணியும் அர்ச்சனாவுக்கு சப்போர்ட் பண்ணுவதாக கூறி ஏற்றிவிடுகிறார்கள். அர்ச்சனா மிகப்பெரிய கேம் ஆடுகிறார்.

நிக்ஷன் நன்றியே இல்லாதவன் என்று சொல்கிறார் அர்ச்சனா. எனக்கு பிரச்னை இருந்தது தான் அழுதேன் என்று தெரிவிக்கிறார். இவங்கள அழுகுறேன் என்று சொன்னா கோபம் வந்துவிடுமாம். இவங்க மத்தவங்கள பத்தி என்னவேணா சொல்லலாமா என்று சொல்லி கோபப்படுகிறார்.

ஒருத்தவங்கள வேதனைப்படுத்திவிட்டு அவங்களைப் பார்த்து சிரிக்கிறது என்ன மாதிரியான விசயம் என அர்ச்சனா சொல்லியிருப்பார் இப்போது அதனை அவரே செய்கிறார் என நிக்ஷன் குற்றச்சாட்டு எழுப்புகிறார்.

பூர்ணிமா மாயாவிடம் நிக்ஷன் பற்றி பேசுகிறார். நாம் அனைவரும் வில்லன்களாக புரஜெக்ட் ஆகிறோம். அவர்கள் திட்டமிட்டு இதை செய்கிறார்கள். ரொம்பவே நெகடிவ்வாக இருக்கிறார்கள். பாய்ஸ்னஸாக ஒன்று செய்கிறார் கூல் சுரேஷ் என்று பூர்ணிமா சொல்கிறார்.

அர்ச்சனா மற்றும் விஷ்ணு இருவரும் வில்லன்கள் என நிக்ஷன் சொல்கிறார்.

அர்ச்சனாவிடம் தினேஷ் மற்றும் கூல் சுரேஷ் இருவரும் ஏற்றிவிடுகின்றனர். நாய் என்று சொன்னதாக தினேஷ் சொல்கிறார். அர்ச்சனா மீண்டும் அழத் தொடங்குகிறார். அழுது அழுது பலரையும் மனம் இரங்க வைத்துவிடுகிறார்.

டாஸ்க்

இரண்டு அணிகளாக பிரிந்து, கன்வேயர் பெல்ட்டில் வரும் பாத்திரங்களை சுத்தமாக கழுவ வேண்டும்.

யார் சுத்தமாக வாடை இல்லாமல் சிறப்பாக கழுவுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.

முடிவில் பி டீம் வின்னர்.

Tags

Next Story
2 வயசு வரைக்கும் உங்க குழந்தைங்களுக்கு இந்த உணவுகளை மட்டும் குடுக்காதீங்க!!