ரியல் கேங்க் இதுதான்.... ரகசியத்தை உடைத்த மாயா! கொந்தளிக்கும் நிக்ஷன்..!

ரியல் கேங்க் இதுதான்.... ரகசியத்தை உடைத்த மாயா! கொந்தளிக்கும் நிக்ஷன்..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 3 வது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 3


ஒருத்தவங்கள ஸ்டாம்பு பண்றது நீங்க என நிக்ஷன், அர்ச்சனா மீது கோபப்படுகிறார். மேலும் இங்கு அர்ச்சனா வந்த போது இங்கிருக்கும் அனைவரும் மற்றவர்களை அட்டாக் செய்து டம்ப் செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இங்கு வந்த பிறகு அப்படி செய்தது அர்ச்சனாதான் என்பதை நிக்ஷன் சொல்கிறார்.

இன்னொரு பக்கம் மாயா தன்னை கேங்க் கேங்க் என்று சொல்லி நம்மீது திணிக்கிறார்கள். உண்மையில் மணி, தினேஷ், அர்ச்சனா ஆகியோர்தான் ஒரு கேங்க் என்று சொல்கிறார் மாயா.

நேற்றைய ஹைலைட்ஸ்

மாயா தனது ஆட்டத்தை ஆட ஆரம்பிக்கிறார். விஷ்ணு பற்றி பூர்ணிமாவிடம் ஏற்றி விடுகிறார். விஷ்ணுவுக்கு எதிராக ஸ்ட்ரைக் கொடுக்க நினைக்கிறார். ஆனால் அப்படி செய்தால் தன்னை வார இறுதியில் வைத்து செய்வார்கள் என்று சொல்ல, பூர்ணிமா இப்போது மாயாவை ஏற்றி விடுகிறார்.

தனது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். மாயா இப்படி கிடையாதே நீங்கள் குரல் கொடுத்தாக வேண்டும். ஸ்ட்ரைக் கொடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் குரல் கொடுக்கவாவது செய்யலாம் என பூர்ணிமாவும் விக்ரமும் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் மாயா, பூர்ணிமா இருவரும் சேர்ந்து விக்ரமை ஏற்றி விடுகிறார் என்பது கிளியராக தெரிகிறது.

அவர்களின் நோக்கம் சரியாக நடந்துவிட்டது. விக்ரமை உசுப்பேற்றி ஒருவழியாக பேச வைத்துவிட்டனர்.

நிக்ஷனைப் பற்றி, தினேஷ் மற்றும் மணி இருவரும் கலாய்த்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் குழந்தைத் தனத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அது என்னவாக இருக்க வேண்டும் என ஒவ்வொருவரிடமும் கேட்கிறார்கள். அடுத்த போட்டியாளர்களிடம் என்ன என்ன குழந்தை தனம் இருக்கிறது அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை கூறுகிறார்கள்.

ரவீனா, விசித்ரா பற்றியும், நிக்ஷன் அர்ச்சனா குறித்தும், அர்ச்சனா பூர்ணிமா குறித்தும், விசித்ரா ரவீனா, அர்ச்சனா, தினேஷ் குறித்தும் பேசுகிறார். அனன்யா அர்ச்சனா குறித்து பேசுகிறார். தினேஷ் நிக்ஷன் குறித்து பேசுகிறார். விக்ரம் மணி குறித்து பேசுகிறார்.

டாஸ்க் முடிந்த நிலையில், விசித்ரா கூல் சுரேஷ் குறித்து மனம் திறந்து பேசுகிறார். அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். மேலும் அர்ச்சனாவிடமும் தனது நிலை குறித்து மன்னிப்பு கேட்க நினைத்தாலும் ஆனால் அர்ச்சனா தனது வழக்கமான பாணியில் விசித்ரா பேசியதை மறுக்கிறார்.

பொம்மலாட்டம்

பிக்பாஸ் வீடு ஒரு கிட்ஸ் ஜோனாக மாற இருக்கிறது. சிலர் குழந்தைகளாகவும், சிலர் பேசும் பொம்மைகளாகவும் மாற இருக்கிறார்கள்.

குழந்தைகள்

தினேஷ்

பூர்ணிமா

விக்ரம்

ரவீனா

மாயா

கூல் சுரேஷ்

பேசும் பொம்மைகள்

விசித்ரா

விஜய்

விஷ்ணு

அர்ச்சனா

நிக்ஷன்

விஷ்ணு பொம்மை விக்ரமுக்கும், விசித்ரா பொம்மை கூல் சுரேஷுக்கும்,

விஜய் பொம்மை மாயாவுக்கும் கொடுக்கப்படுகிறது.

நிக்ஷன் பொம்மை ரவீனாவுக்கும், அர்ச்சனா பொம்மை தினேஷுக்கும் கொடுக்கப்பட்டது.

குழந்தைகள் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பொம்மலாட்டம் டாஸ்க் முடிவடைந்ததாக பிக்பாஸ் அறிவித்தார்.

மாயாவுக்கு ஒரு கோல்டன் ஸ்டாரும், விஜய்க்கு ஒரு கோல்டன் ஸ்டாரும் வழங்கப்பட்டது.

விஷ்ணு செம்ம காண்டாக இருந்தான் என்று பூர்ணிமா சொல்கிறார். மாயாவும் அதை சரிதான் என ஏற்றுக்கொண்டார்.

வீட்டிற்குள் விசித்ரா, விஷ்ணு, அர்ச்சனா ஆகியோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். யார் யார் எப்படி விளையாண்டார்கள் என்பது குறித்து பேசிக்கொண்டார்கள். பேசுவதையெல்லாம் பேசிவிட்டு நான் சூழ்நிலை கைதி என்று அர்ச்சனா தன்மீது தவறில்லை என்பதை போல பேசுகிறார்.

விசித்ரா பற்றி பேசத்தான் சொன்னார்களே தவிர, அவர் பேசிய கருத்து எல்லாமே அர்ச்சனா பேசியதுதான். அவரது சொந்த கருத்துதான். இதனால் வருத்தமடைந்த விசித்ரா தான் வெளியில் கிளம்புவது குறித்து ஆலோசித்து வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!