உடைந்து அழும் பூர்ணிமா! உசுப்பேற்றும் மாயா..!

உடைந்து அழும் பூர்ணிமா! உசுப்பேற்றும் மாயா..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 3 வது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 3

வெளியிலிருந்து உள்ளே வந்த விஜய்யும், அனன்யாவும் பூர்ணிமாவைப் பற்றி பேசியது அவரை ரொம்பவே பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி கமல்ஹாசன் நேரடியாக குற்றம் சாட்டியதும் அவரை அழ வைத்துவிடுகிறது. இப்போதும் தன் மீதான தவறை புரிந்துகொள்ளாமல் பூர்ணிமா தான் பண்ணியது சரிதான். உள்ளே வந்தவர்கள்தான் தன் மீது கல்லை எறிந்திருப்பதாக உணர்கிறார். இதற்கு காரணம் மாயாதான். இவர் பூர்ணிமாவை மனதளவில் வசியம் செய்திருப்பதுபோல தான் தோன்றுகிறது. மாயா பேச்சை கேட்காமல் இருந்தால் மட்டுமே பூர்ணிமா திருந்த வாய்ப்பிருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

நேற்றைய எபிசோட் ஹைலைட்ஸ்

விமர்சனம் குறித்த தனது பார்வையை முன்வைத்துக் கொண்டே நிகழ்ச்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன்.

விமர்சனங்களை ஏற்றக் கொள்ளும் மனப்பக்குவம் தேவை. அது மற்றவர்களின் மீதுள்ள விமர்சனமாய் இருந்தால் அது சரி எனவும் தன் மீது விமர்சனம் எழுந்தால் அது தவறு எனவும் பேசுவது இங்கு நிறைய இருக்கிறது.

வீட்டுக்குள்ளே செல்லும்போதே இந்த டாபிக்குடன்தான் தொடங்கினார் கமல்ஹாசன்.

இந்த வீட்டில் யார் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்ற கேள்விக்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைக் கைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ச்சனா மீதும், மாயா, விசித்ரா மீதும் இந்த குற்றச்சாட்டுகள் அதிகம் எழுந்து வருகின்றன.

பூர்ணிமாவும் தன் மீது வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார் எனவும் போட்டியாளர்களில் சிலர் தெரிவித்தனர்.

அனைவருக்கும் சேர்த்தே கமல்ஹாசன் அதிரடியாக தனது பார்வைகளை தெரிவித்தார். தனக்கு யாரும் வசனம் எழுதி தரவேண்டாம் எனவும், நான் என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யத் தேவையில்லை எனவும் காட்டமாக கூறினார்.

அனைத்து நிபந்தனைகளுக்கும் சம்மதித்தே கையெழுத்து போட்டு உள்ளே வந்திருக்கிறீர்கள் என்பதையும் நினைவூட்டினார்.

பூர்ணிமா மீதும் சில மறைமுக விமர்சனங்களை சூசகமாக வைத்தார். ஆனால் அது அனைவருக்கும் பொருந்தும் வகையில் பேசி அனைவரையும் தங்களது ஆட்டங்களை சரியாக ஆட சொல்லி கேட்டுக் கொண்டார்.

விஜய் எண்ட்ரி

விஜய் மீண்டும் திரும்ப உள்ளே வந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு கண்டெஸ்ட்டன்ட்டும் இதை இதை உடைக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் அவங்க பிளஸ், மைனஸ் பாய்ண்ட்டுகளைச் சொல்லி அதை உடைக்க வேண்டும் என அவர்கள் முகம் பதித்த டைல்ஸ்களை உடைக்கிறார்.

மாயா இப்போது ரொம்பவே டவுன் ஆகிவிட்டார் என்கிறார். ரவீனா, மணி குறித்து சில விசயங்களைப் பகிர்ந்தார். கூல் சுரேஷ் குறித்த அவரது இரட்டை வேடம் குறித்தும் பேசினார். விஷ்ணுவின் ஸ்ட்ராட்டஜியும் விசித்ராவின் ஸ்ட்ராட்டஜியும் தெளிவாக தெரிந்துகொண்டு அடித்து ஆடுகிறார் விஜய்.

கடைசியாக கேப்டனாக இருக்கும் நிக்ஷன் பொய் சொல்வதுதான் அவனுடைய பிரேக்கிங் பாய்ண்ட் என்று சொல்கிறார் விஜய்.

புத்தகப் பரிந்துரை

bend in the ganges

by

Manohar Malgonkar

பூர்ணிமா, மாயாவுக்கு குட்டு

கமல்ஹாசன் நிகழ்ச்சியின் முடிவில் மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு குட்டு வைத்துச் சென்றார். நிக்ஷனுக்கும் வார்னிங் கொடுத்திருந்தார். பின் அனைவரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கமல்ஹாசன், அனன்யாவை வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்.

அனன்யா தன்னுடன் கொண்டு வந்த டேக்ஸை அவரவர் குணத்துக்கு ஏற்றவாறு கொடுக்கிறார்.

  • விஷ பாட்டில் - மாயா
  • நரி- விசித்ரா
  • கொசு - கூல் சுரேஷ்
  • கிரிஞ்ச் - நிக்ஷன்
  • நூலாட்டி பொம்மை - ரவீனா
  • மிக்சர் - விக்ரம்
  • சொம்பு - அர்ச்சனா
  • செக்யூரிட்டி - விஷ்ணு
  • காலி பாத்திரம் - ஜோவிகா
  • தவளை - பூர்ணிமா
  • பூமர் - மணி

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!