ஜெயிலுக்கு போமாட்டேன்...விசித்ரா திடீர் போர்க்கொடி!

ஜெயிலுக்கு போமாட்டேன்...விசித்ரா திடீர் போர்க்கொடி!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 3வது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 3

வொர்ஸ்ட் பெர்ஃபாமன்ஸ் என்று வீட்டிலுள்ள அனைவரும் ஒருசேர திட்டமிட்டு தங்கள் இருவரையும் கார்னர் செய்துள்ளனர் என்று விசித்ராவும், அர்ச்சனாவும் நினைக்கிறார்கள். இதனால் தாங்கள் தங்களது தண்டனையை ஏற்கமாட்டோம் எனவும், ஜெயிலுக்கு செல்லமாட்டோம் எனவும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.



முந்தைய நாள் ஹைலைட்ஸ்

நாள் 45

மணியைப் பற்றி மாயாவும் விஷ்ணுவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மணியை விட விக்ரம்தான் பெட்டர் பிளேயர். ஆனால் அவருக்கு போய் ஸ்டாரைக் கொடுத்துவிட்டார்களே எனும் ஆதங்கத்தில் இருக்கிறார்.

மாயாவும் விசித்ராவும் சாப்பிட்டுக்கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் என்ன பிரச்னை என்பது குறித்து இருவரும் பேச ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் பழைய விசயங்களை பேசி தங்களுக்குள் இருக்கும் சண்டையை முடித்துக் கொள்ள பரஸ்பரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாயா தனது வாழ்க்கையில் சந்தித்த சில விசயங்களால் காயப்பட்டிருக்கும் நிலையில் இப்படி பேசியது தவறு என்பது எனக்கு புரிந்தது என்று விசித்ரா ஓபனாக பேசிவிட்டார். இதனால் இருவருக்குள்ளும் இருந்த வேறுபாடுகள் குறைந்துள்ளது.

விக்ரம் நள்ளிரவில் மிக்சர் எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

நாள் 46

காலையில் மணி, விஷ்ணு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாயாவைப் பற்றி பேசுவது போலத் தெரிகிறது.

சாப்பிடும் இடத்தில் மாயா,பூர்ணிமா - விஷ்ணு, தினேஷாக மாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மாயா, பூர்ணிமாவாக விஷ்ணு, மணியுடன், விக்ரமாக இருக்கும் அர்ச்சனா பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விஷ்ணு, கூல் சுரேஷ், அர்ச்சனா ஆகியோர் வேடத்தில் இருக்கும் மாயா, விசித்ரா, கூல்சுரேஷ் ஆகியோர் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விசித்ரா குறித்தும் அர்ச்சனா குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் டாஸ்க் 2

ஆண்கள் - பெண்களுக்கு என ஒரு வாக்குவாத போட்டி நடைபெறவுள்ளது.

1 யாருடைய கண்ட்ரோலில் கிச்சன் சிறப்பாக இருந்தது.

ஆண்கள் பெஸ்ட்டா? பெண்கள் பெஸ்ட்டா?

மணி வேடத்தில் இருக்கும் ரவீனா, ஆண்கள் பற்றி பெருமிதமாக பேசுகிறார். பதிலுக்கு விசித்ரா வேடத்தில் இருக்கும் நிக்ஷன் பெண்கள்தான் சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

முடிவில் பெண்களே சிறந்தவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

2 யாருடைய கண்ட்ரோலில் பிக்பாஸ் வீடு சிறப்பாக இருந்தது?

பூர்ணிமா வேடத்தில் இருக்கும் மணி பெண்கள்தான் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக செயல்பட்டது பெண்கள்தான் என்று தெரிவித்து பேசுகிறார்.

கூல் சுரேஷ் வேடத்தில் இருக்கும் விசித்ரா மாயா, பூர்ணிமா பற்றி பல விசயங்களைப் பேசுகிறார். அவர்கள் கேப்டன்ஷிப்பில் எதுவும் செய்யவில்லை என்று பேசுகிறார்.

ஆண்கள்தான் சிறந்தவர்கள் என தீர்ப்பு வருகிறது.

3 இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள்? ஆண்களா? பெண்களா?

ஜோவிகாவாக இருக்கும் பிராவோ பேசுகிறார். ஆனால் அவர் பெண்களுக்காக பேசவேண்டும் என்று பெரிதாக அர்த்தமுள்ளதாக பேசியதாக தெரியவில்லை.

தினேஷ் வேடத்தில் இருக்கும் பூர்ணிமா ஆண்கள்தான் பிக்பாஸின் இந்த சீசனில் வெற்றி பெறுவார்கள் என்று பேசுகிறார்கள்.

அக்ஷயா வேடத்தில் இருக்கும் தினேஷ் பெண்கள்தான் வெற்றி பெறுவர் என்று பேசுகிறார்.

பெண்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள்.

மணியும் நிக்ஷனும் தனியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக செயல்பட்டு இந்த வாரம் எலிமினேசனிலிருந்து எஸ்கேப் ஆகிவிடவேண்டும் என்று சொல்கிறார்கள் மணி. மாயாவும் பூர்ணிமாவும் தனியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாயாவுக்கு கடுப்பாக இருக்கிறது. விக்ரமுக்குதானே கொடுத்திருக்க வேண்டும்

மணி டேஞ்சர் லிஸ்டில் இருப்பதால் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளதால் நல்ல பிளேயர் ஒருவர் வெளியே செல்ல வாய்ப்பு பிரகாசமாகியிருப்பதாக மாயா கோபப்படுகிறார்.

தீபாவளி விருந்து

15 பேரில் இருந்து 5 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் 3 ஸ்டார்கள் இருக்கின்றன.

ரவீனா - 5 லட்டுகளை எடுக்கலாம்

விஷ்ணு - 4 லட்டுகளை எடுக்கலாம்

பிராவோ - 3 லட்டுகளை எடுக்கலாம்

கூல்சுரேஷ் - 2 லட்டுகளை எடுக்கலாம்

தினேஷ் - 1 லட்டு எடுக்கலாம்

இதில் ரவீனாவுக்கு 1 ஸ்டாரும், விஷ்ணுவுக்கு 2 ஸ்டார்களும் கிடைக்கின்றன.

ஒரு பக்கம் விஷ்ணுவும் பூர்ணிமாவும் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மணிக்கு ஸ்டார் கொடுத்தது பற்றி மாயாவும் விசித்ராவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உடன் ஜோவிகாவும் இணைகிறார். விசித்ரா தன்னை யார் யார் நாமினேஷன் செய்திருப்பார் என பேசிக்கொண்டிருக்கிறார்.

ஜட்ஜ் ஒருவர்

மற்ற 14 பேரும் 7, 7 என இரண்டு அணிகளாக பிரிந்துகொள்கிறார்கள். பலூன்களை ஊதி, கட்டி அதில் ஐஸ்வர்யா ஃபெர்ட்டிலிட்டி சென்டர் எனும் வாக்கியம் வரும் வகையில் சிறப்பாக செய்தவருக்கு வெற்றி.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!