சோகத்தை கொட்டிய விச்சு! பூர்ணிமா, மாயா செய்த சேட்டை..!

சோகத்தை கொட்டிய விச்சு! பூர்ணிமா, மாயா செய்த சேட்டை..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 3வது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 3

விசித்ரா தனது ஆதங்கத்தை கொட்டுகிறார். தான் நடிக்கவில்லை எனவும் தன்னால் நடிக்க முடியாது எனவும் அவர் பேசுகிறார். விக்ரமா பாத்தா என் பையன பாக்றமாதிரி இருக்கு. அத கிண்டல் பண்ணி சீப்பா டிராமானு பேசுறது எனக்கு ஹர்ட்டிங்கா இருக்கு என்று மிகவும் உணர்ச்சிவசமாக பேசிக்கொண்டிருக்கையில், பூர்ணிமாவும், விசித்ராவும் தங்களையும் மேம் என்று கூப்பிடச் சொல்லி கேட்கிறார்கள்.


நேற்றைய ஹைலைட்ஸ்

இடிச்ச பச்சரிசி பாடலுடன் இன்றைய எபிசோட் துவங்குகிறது. இந்த பாடலுக்கு வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் அழகாக ஆட்டம் போடுகிறார்கள்.

ஃபேன் ஃஸோன் கேள்விகள்

இந்த வாரம் முழுக்க என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு ரசிகர்கள் உப்புமா என்று தெரிவித்துள்ளனர்.

காலங்காத்தாலேயே விஷ்ணுவுக்கும் அக்ஷயாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஜாலியாக பேச ஆரம்பிக்கிறார்கள் பூர்ணிமாவும் மாயாவும் வருகிறார்கள் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தாலும் அது பெரிய சண்டையாக இல்லை. உடனே கேப்டனுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. போரிங்காக நிகழ்ச்சி தொடங்குகிறது.

கூல் சுரேஷ் வேடத்தில் ரவீனா வந்து அதிர்ச்சி தருகிறார். அனைவரும் இவர் செய்வதை ரசிக்கிறார்கள். தாடி வரைந்து கொண்டு வரும் அவரின் நடவடிக்கைகள் வீட்டிலுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.

விஷ்ணுவுக்கும் அக்ஷயாவுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் அடுத்தடுத்து சண்டையாக வளர்கிறது. கிச்சனில் வேலை இருக்கிறது என விஷ்ணு கிளம்புகிறார். அதுவே வாக்குவாதமாக வளர்கிறது. இதனிடையே பூர்ணிமா வந்து திடீரென சண்டையை பற்ற வைக்க பார்க்கிறார். அக்ஷயா அழத் தொடங்குகிறார். பின் ஒருவழியாக சமாதானம் ஆகி இருவரும் ஸாரி கேட்டுக்கொள்கிறார்கள்.

டீ காஃபி எனக்கு வேலை இல்லை என விஷ்ணு சொல்ல, பிராவோ நிலைமையை சமாளிக்கிறார். பின் அக்ஷயாவிடம் சென்று உனக்கு கோகோ பால் செய்து தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கூல் சுரேஷ், குட்டி கூல், சுட்டி கூல் என காமெடி செய்வார்கள் என்று எதிர்பார்த்தால், கடுப்படிக்கிறார்கள். மாயா பற்றி பேச்சு எழுகிறது.

விஷ்ணுவிடம் பேச்சை வளர்க்கிறார் பூர்ணிமா. சமாதானம் செய்து முடிந்த விசயத்தை பூர்ணிமா மீண்டும் கிளப்புகிறார். அப்போதும் விஷ்ணு சண்டை போடுவார் என்று பார்த்தால், அவர் கூலாக மாற்றிக் கொள்கிறேன் என்று கூறிவிடுகிறார்.

பாத்திரம் துலக்கும்போது பூர்ணிமாவுக்கும், தினேஷுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பூர்ணிமா எப்படியாவது தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள எப்போதும் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறார். எந்த ஒரு விசயத்தையும் ஊதி பெரிதாக்கி தன்னை சுற்றியே நிகழ்ச்சி நடக்கும்வகையில் திட்டமிடுகிறார். சந்திரமுகியாக மாறுகிறார் பூர்ணிமா.

டாஸ்க் - ஷாப்பிங் ரிபேமண்ட் டாஸ்க்

தோற்றால் ஒரு வாரம் பெட்ரூம் மூடப்படும்.

சுமை தாங்கி

தலையில் செங்கலை வைத்து பாலண்ஸ் செய்யவேண்டும். விரல்களில் நிற்கவேண்டும்.

நிக்ஷன்

பூர்ணிமா

மாயா

பிராவோ

நால்வரும் இந்த டாஸ்கை செய்கிறார்கள்.

முதல் ஆளாக பிராவோ அவுட் ஆகிறார்.

இரண்டாவது ஆளாக நிக்ஷன் அவுட் ஆகிறார்.

டாஸ்க்கில் தோற்றதால் பெட்ரூம் கதவுகள் மூடப்படுகின்றன என பிக்பாஸ் அறிவிக்கிறார். அனைவரும் தாங்கள் வெற்றி பெற்றதாகவே நினைக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் அவுட் ஆனதால் வெற்றி இல்லை என்பதை தெரிவிக்கிறார் பிக்பாஸ்

மணி, விஷ்ணு, ஜோவிகா மூவரும் அர்ச்சனா குறித்து பேசுகின்றனர். மணி அர்ச்சனா சரியாக வேலை செய்யமாட்டேங்கிறார் என கூறுகிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்