விசித்ராவால் கதறி அழும் பூர்ணிமா! தேற்றும் மாயா...!

விசித்ராவால் கதறி அழும் பூர்ணிமா! தேற்றும் மாயா...!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய நாளின் மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 3

புரோமோ துவக்கத்திலேயே பூர்ணிமா அழ ஆரம்பிக்கிறார். அவரை தேற்றுகிறார் மாயா. இருவரும் நல்ல நண்பர்களாக ஒருவரையொருவர் மெருகேற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் பூர்ணிமா தனக்கு கிடைத்த இந்த பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்கிற பயத்தில் மனதை கலக்கி தேம்பி அழத் தொடங்குகிறார்.

மீண்டும் கமல்ஹாசன் பற்றிய பேச்சைத் தொடங்குகிறார் பூர்ணிமா. ஆனால் இம்முறை விசித்ராவை தப்பு செய்தவராக கூறுகிறார். தப்பு பண்ணது நீ. பெருசா கேள்வி எதுவும் கேட்கவில்லை என்பதற்காக நீ தவறு செய்தவரில்லை என்று அர்த்தமில்லை எனும் பொருளில் அவர் பேசுகிறார்.

கொளுத்தி போடு பட்டாச..

இந்த செக்மண்டில் தினேஷ் டாஸ்கை வாசிக்கிறார். இது தீபாவளி நாளில் நடைபெற்ற ஒரு டாஸ்க் என்பது தெளிவாகிறது. அதனால் கொளுத்தி போடு பட்டாச என பெயர் வைத்திருக்கிறார்கள்.

மொத்தமாக ஒரு பெட்டியில் பல பட்டாசுகள் வைக்கப்பட்டிருக்கும். பட்டாசுகளின் தன்மைக்கு ஏற்றவாறு அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களுக்கு இந்த பட்டாசை பரிசளிக்க வேண்டும் என்பது விதி.

முதல் பட்டாசாக புல்லட் பாம் ஒன்றை தேர்ந்தெடுக்கிறார் விசித்ரா. வெடிக்கிறது ஒரு இடத்துல, செதறி விழுகிறது ஒரு இடத்துல. அதற்கு பூர்ணிமா என்று சொல்கிறார் விசித்ரா.

அடுத்த பட்டாசை எடுக்கிறார் மாயா. எப்படியும் அதனை அர்ச்சனாவுக்குதான் தருவார் என நாமே முன்பு கெஸ் செய்திருப்போம். பட்டர்பிளை வெடியை அர்ச்சனாவுக்கு தருகிறார. பறந்து வெடிக்கும்னு நினைப்போம். ஆனா புஸ்ஸுனு போயிடும் என்கிறார்.

கடந்த வார ஹைலைட்ஸ்

கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 42வது நாளில் உள்ளது. இந்த வாரம் எவிக்‌ஷன் ப்ராசஸின் அடிப்படையில் ஐஷு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஐஷுவின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் புல்லி கேங்கிற்கு கடுமையான அறிவுரைகளை வழங்கியது போல புரோமோவில் காட்டப்பட்டது. அதேநேரம் பெண்களின் கண்ணியம் குறையக்கூடாது என்பதிலும் கமல்ஹாசன் கவனமாக இருந்தார். அவர் மீண்டும் மீண்டும் அந்த பெண்கள் பொய் சொல்லவில்லை தங்களுக்கு நிகழ்ந்ததை உறுதியாக சொல்கிறார்கள் என்பதை அவர்கள் வாயாலேயே கேட்டுப் பெற்றார்.

பிரதீப் ஆண்டனியின் செயல்பாடுகள் பெண்களுக்கு மட்டுமல்ல வீட்டில் இருந்த ஆண்களுக்கும் முகம்சுளிக்கும் வகையில் இருந்ததைக் காணமுடிந்தது. கமல்ஹாசனும் தன்னிலை விளக்கத்தை அளித்தார். இதில் முடிவு எடுத்தவர்கள் பெண்கள்தான். தாமதமான நீதி அநீதி என்று ஒரு வாக்கு உண்டு, ஆனால் அதற்காக நடந்த விசயங்களை மாற்றிவிட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றங்கள் காலம் தாழ்த்தி வெளியில் வந்தாலும் தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்பதே நீதி என்பதுபோல கமல்ஹாசன் பேசியிருந்தார்.

பிரதீப் ஆண்டனியின் செயல்பாடுகள் மிகவும் தவறானவை என பிக்பாஸ் பார்வையாளர்களே சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பரப்பி பேசி வருகின்றனர். இந்நிலையில் அந்த அலை ஓய்ந்து இப்போது ஐஷு வெளியேற்றப்பட்டதுக்கு காரணத்தை பேசி வருகிறார்கள்.

ஐஷு வெளியேற்றப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் முக்கியமானது அவரது சர்ச்சைகள். ஐஷு பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, சக போட்டியாளரான நிக்சனுடன் நெருக்கமாக பழகினார். இருவரும் கண்ணாடி வழியே முத்தங்களை பரிமாறிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் ஐஷுவின் பெற்றோர் மிகவும் கோபமடைந்தனர். பிக் பாஸ் செட்டுக்கு சென்று ஐஷுவை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த சர்ச்சையால் ஐஷுவின் பெயர் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க பலர் தயங்கியதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ, ஐஷு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் போல இந்த வாரமும் பரபரப்பாக நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!