ரெண்டு அணி.. ஆனால் நேர்மை இருந்துதா? கேள்வி எழுப்பும் கமல்..!

ரெண்டு அணி.. ஆனால் நேர்மை இருந்துதா? கேள்வி எழுப்பும் கமல்..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2 வது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 2

கடந்த வாரம் அவர்களுக்குள் கலை இருந்ததால் அவர்கள் ஒற்றுமையாக ஆடினார்கள். தற்போதைய வாரத்தில் அவர்களின் குடும்பத்தார் வந்து சென்றனர். ஆனால் இந்த வாரம் மீண்டும் தொடங்கியது பிரச்னைகள். போட்டியுடன் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என கமல்ஹாசன் பேசுகிறார்.

பிக்பாஸ் ஹைலைட்ஸ்

விஷ்ணுவும் தினேஷும் இன்று நடந்த விளையாட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். விசித்ராவுக்கு ஸ்டே கொடுத்து ஏன் என பேசுகிறார். அந்த பக்கம் விசித்ராவை பற்றி பூர்ணிமா பேசுகிறார். தினேஷை ஏன் கில் செய்யவில்லை என விசித்ராவிடம் கேட்க, அதற்கு அவர் பதில் சொல்கிறார்.

விசித்ரா தனக்கு தினேஷை கில் செய்ய தோணவில்லை என்கிறார். அந்த நேரத்தில் பூர்ணிமா விஷ்ணு மீதான வன்மத்தைக் கக்குகிறார். விஷ்ணுவைத் தான் எல்லாரும் எலிமினேட் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். விசித்ரா அங்கு பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தும் ரவீனா அவரை பாத்திரம் கழுவ கூப்பிடுகிறார். அலட்டிக் கொண்டே பாத்திரம் கழுவி கொடுக்கிறார் விசித்ரா.

சின்ன புள்ளத் தனமா இருக்கு என விசித்ரா புலம்பிக் கொண்டே இருக்கிறார். இது ஒரு பெரிய மேட்டரே கிடையாது ஏன் நான் கழுவ மாட்டேனா என்று சொல்கிறார். அப்போது ரவீனா கரண்டியையும் கழுவித் தர கேட்கிறார். உடனே விசித்ரா கோபப்படுகிறார். இதெல்லாம் ரொம்ப கேவலமாக, சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

விசித்ரா இந்த பிரச்னையில் தினேஷை இழுக்கிறார். அவர் மூஞ்சை பார்த்தாலே வெறுப்பாகிறது. இவங்கள்லாம் இருந்து என்ன பிரயோஜனம், வாழ்ந்து என்ன பிரயோஜனம் என மோசமாக பேசுகிறார். அவர் மனைவியைப் பார்த்து திரும்பி கிரும்பி வந்திடாதம்மா, உடம்பு முழுக்க விஷம் வன்மம், பொறாமை என்று புலம்புகிறார். நான் பேசிக்கிட்டிருக்கிறது இவங்களுக்கு காண்டாகுது . இங்க இருக்குற ஹவுஸ்மேட்டுக்கே இவ்ளோ பொறாமன்னா கூட இருக்குறவங்களுக்கு ச்சை.. இன்னும் 15 நாள் கம்முனு இருந்துட்டு வீட்டுக்கு போயிடணும்னு சொல்கிறார் விசித்ரா.

மாயா, பூர்ணிமா, நிக்ஷனுடன் பேச விடவில்லை என கோபப்படுகிறார் விசித்ரா.

பின்னர் ரவீனாவும் விசித்ராவும் பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த பிரச்னை குறித்து மீண்டும் பேச்சு எழுகிறது. விஷ்ணு, தினேஷ் இருவரும் இதனை பேசுகிறார்கள். சண்டை போடறதா இருந்தா போடலாம். ஆனா மரியாதை தெரியாதவன்னு ஒரு ஸ்டாம்பு குத்துவாங்க. அத வாங்கி வச்சிட்டு எதுக்கு.. 15 நாள்ல வெளியே போயிடப் போறோம் என்று சொல்கிறார்.

பூர்ணிமாவும் மாயாவும் வெறுக்கத்தக்க வகையில் தினேஷ் குறித்து பேசுகிறார்கள். அவர் சீக்கிரம் வெளியே போயிடுவார் என்கிறார் மாயா. அடுத்து மாயாவும் பூர்ணிமாவும் காமெடி என்று ஏதோ செய்கிறார்கள். மணியும் விசித்ரா குறித்து சில விசயங்களைப் பேசுகிறார். ரவீனாவும் தினேஷ் குறித்து விசித்ரா பேசியதை எடுத்து சொல்கிறார். அனைவரும் விசித்ராவின் நடவடிக்கைகள் குறித்து புரணி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பூர்ணிமா, மாயாவை நம்பி ஏமாந்து போவதாகவே தோன்றுகிறது. இருவரும் சேர்ந்து விசித்ராவை நாசூக்காக பிரைன் வாஸ் செய்வதாக தெரிகிறது. அவங்களலாம் நம்பக் கூடாது என்று மாயா சொல்கிறார். இஇஇ னு சிரிச்சி பேசுறாங்க அப்படி இப்படி சொல்லி விளையாட்டு தனமாக விஷ ஊசி ஏற்றுகிறார் மாயா.

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்

போர்டை மேலே வைத்து ஒரு கையால் நான்கு பேர் பிடித்துக் கொள்ள வேண்டும். கையை எடுப்பவர்கள் அவுட்.

விஷ்ணு, மணி, ரவீனா, தினேஷ் ஒரு அணியாகவும், மாயா, பூர்ணிமா, விசித்ரா, நிக்ஷன் ஒரு அணியாகவும் விளையாடுகிறார்கள். பஸர் அடித்ததும் டிக்கெட் டூ ஃபினாலே டிக்கெட்டை எடுத்து போர்டில் வைத்து பிடித்துக் கொள்கிறார்கள்.

முதல் ஆளாக கையை எடுத்து வெளியே செல்கிறார் நிக்ஷன்.

இரண்டாவது ஆளாக விசித்ரா விட்டுக் கொடுக்கிறார். இதனால் மாயா, பூர்ணிமா இருவரும் டிக்கெட்டை மேலே உயர்த்தி பிடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் பயங்கரமான வலி ஏற்படுகிறது. ஆனால் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

மூன்றாவது ஆளாக பூர்ணிமா விட்டுக் கொடுக்கிறார். இப்போது மாயா மட்டும் அந்த போர்டை தூக்கி பிடிக்கிறார். பூர்ணிமாவின் கை விறைத்து நிற்கிறது. இதனால் அவர் கொஞ்சம் சிரமமப்படுகிறார்.

நான்காவது ஆளாக மாயா இந்த போட்டியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அவருக்கு 1 பாய்ண்ட் வழங்கப்படுகிறது.

ஐந்தாவதாக தினேஷ் வெளியேறுகிறார். இதனால் அவருக்கு 2 பாய்ண்டுகள் வழங்கப்படுகின்றன. அடுத்து விஷ்ணுவுக்கு 3 பாய்ண்ட் கொடுக்கப்படுகிறது.

ரவீனாவும் மணியும் போர்டை பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மணி விட்டுக்கொடுக்க அவருக்கு 4 பாய்ண்ட்களும், ரவீனாவுக்கு 5 பாய்ண்ட்களும் கொடுக்கப்படுகிறது.

இதன்மூலம் 10 புள்ளிகளுடன் அதிக புள்ளிகள் பெற்று விஷ்ணு முன்னணியில் இருக்கிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!