கண்டபடி ஆடும் போட்டியாளர்கள்! கடுப்பான பிக்பாஸ்...! மாயா பூர்ணிமா மோதல்..!

கண்டபடி ஆடும் போட்டியாளர்கள்! கடுப்பான பிக்பாஸ்...! மாயா பூர்ணிமா மோதல்..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2 வது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 2

உங்களுக்கு கொடுக்கப்பட்ட கரன்ஸிய ஷேரிங்க், ஸ்ட்ராட்டஜி, ஃபேவரட்டிஸம்னு ஏன் நீங்களே உங்க மதிப்ப குறச்சிக்கிட்டீங்க என்று பிக்பாஸ் கண்டிப்பதுடன் இரண்டாவது புரோமோ துவங்குகிறது. போர்டுல என்ன எழுதுனாலும் பாத்துக்கிட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சீங்களா? என பிக்பாஸ் கடுகடுப்பாக கேட்கிறார்.

மாயாவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையில் சண்டை மூழ்கிறது. மாயா தனக்கு இனிமே இந்த காசு தேவையில்ல என்று சொல்ல, எனக்கும் இதுதேவையில்ல என விட்டெறிந்துவிட்டு செல்கிறார் பூர்ணிமா. மேலும் பூர்ணிமா, விஷ்ணு இருவரும் சேர்ந்து நிற்பது புரோமோவில் காட்டப்பட்டுகிறது.

நேற்றைய ஹைலைட்ஸ்

விஷ்ணுவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையில் பிரச்னை வந்துவிடுகிறது. இதனால் அர்ச்சனா இருவருக்கும் சமாதானம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால் விஷ்ணு இதை தானே பேசி தீர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். பின் அர்ச்சனா அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

பூர்ணிமாவிடம் விஷ்ணு தன்னுடைய பிரச்னையை பேசி தீர்க்கிறார். உங்களை ஹர்ட் பண்ண நினைக்கவில்லை, அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என விஷ்ணு சொல்லிவிடுகிறார். பின் பூர்ணிமாவும் தான் ஹர்ட் பண்ண நினைக்கவில்லை என்று தெரிவிக்கிறார்.

உங்களுக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டால், அதை வெறும் சண்டையாக நினைக்காமல் என்னை பழிவாங்க நினைக்கிறீர்கள். நீங்கள், தினேஷ் போன்றோர் இப்படித்தான் நினைக்கிறீர்கள். ஏன் வெளியில் சென்று நீங்கள் பேசுவீர்களா என்று கூட தெரியாது. இன்னும் எத்தனை வாரங்கள் இருக்கப் போகிறோம். நீங்கள் டீம் சேர்ந்து என்ன செய்கிறீர்கள் என்பது தெரியும் எனக்கு என்று சொன்னதும் உடனடியாக கிளம்பிவிடுகிறார் விஷ்ணு.

பெட்ரூமில் சென்று படுத்துக் கொள்கிறார் விஷ்ணு. இதனால் பூர்ணிமா கவலையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மாயா, பூர்ணிமாவை கலாய்க்கிறார்.

விக்ரமும் அர்ச்சனாவும் தங்களுக்குள் இருக்கும் பிரச்னையை பேசி தீர்க்கின்றனர். தனியாக இருக்கும்போது ஸாரி கேட்கவேண்டும் என்று நினைத்து கேட்டதாக சொல்கிறார் அர்ச்சனா.

மீண்டும் விஷ்ணு, பூர்ணிமா சாப்பிடும்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிஜமாகவே கோபம் வரும்போது நான் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை என்று பூர்ணிமா சொல்ல, விஷ்ணு என்னிடம் வந்து பேசினாலே போதும் என்று பேசுகிறார். சண்டை போட்டால் எதிரி கூட கூட சேர்ந்து உட்காருகிறீங்கள். ஆனால் என்னை நண்பர் என்று சொல்லி என்னிடம் வந்து பேசிக்கொள்ள மாட்டீர்களே? என்று சொல்கிறார் பூர்ணிமா.

பேசுனா எல்லாமே சரியாகிவிடும். ஆனால் நீங்கள் பேசவே மாட்டீர்களே என்று விஷ்ணுவிடம் பூர்ணிமா சொல்கிறார். மாயா தன்மீது கோபத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்.

மாயா, விஷ்ணுவைப் பற்றி கலாய்த்துக் கொண்டிருக்கிறார். பூர்ணிமாவை அழைத்து அவரையும் கலாய்க்கிறார். விஷ்ணுவும் அங்கே வந்து அனன்யா, மாயாவிடம் ஸாரி கேட்டுக் கொண்டிருக்கிறார். மாயா திரும்ப திரும்ப விஷ்ணு பற்றி பூர்ணிமாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஈஸி டேக்கிங் கேர்ள் என்பதாக நீங்கள் இருக்கிறார்கள். பூர்ணிமா மாயாவின் பேச்சைக் கேட்பதாகவே தெரிகிறது.

விசித்ராவும் கூல் சுரேஷ் பற்றி பேசி மன்னிப்பு கேட்கிறார். மனிதனோட உணர்வுகள் உங்களுக்கு என்னை நாமினேசன் செய்வதற்குதான் தேவைப்படுகிறதா என கூல் சுரேஷ் வருத்தப்படுகிறார். விசித்ரா அதற்கும் மன்னிப்பு கேட்கிறார். பின் கூல் சுரேஷ் கேமரா முன் வந்து நான் வெளியே கிளம்பலாம் என்று இருக்கிறேன். குடும்பத்தை மிஸ் செய்வதாகவும், மழை வெள்ளம் வரும்போது நான் உள்ளே இருந்திருக்கிறேனே என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் மாயா, விஷ்ணு பற்றி பூர்ணிமாவிடம் பேச, மாயாவும் பூர்ணிமாவும் விக்ரமிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பூர்ணிமா மாயா பக்கமும் வர முடியாமல், விஷ்ணு பக்கமும் போக முடியாமல் தவிக்கிறார். மாயாவும், விக்ரமும் மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் இது பூர்ணிமாவை மேலும் காயப்படுத்துகிறது. அதன்பிறகுதான் இது வேண்டுமென்றே விளையாட்டாக செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

விஷ்ணுவும், நிக்ஷனும் அர்ச்சனாவின் நடிப்பை சரியாக கண்டுபிடித்து விட்டதாக பேசிக் கொள்கிறார்கள். அர்ச்சனா தான் திருந்திவிட்டதாக சொல்லி அழகாக தன்னை நிரூபித்துக் கொண்டார்.

டைம் பாம்

மூன்று பேர், மணி, நிமிடம், நொடி ஆகிய மூன்று பவுல்களை வைத்துக் கொண்டு நிற்க வேண்டும். நேரத்தை சரியாக கணிக்க வேண்டும். மணி, ரவீனா, விஷ்ணு ஆகியோர் நொடி, நிமிடம், மணி ஆகிய பவுல்களை வைத்து நிற்கிறார்கள்.

மணிச்சந்திரா நொடியை கணக்கு செய்கிறார். ரவீனா நிமிடங்களில் கணக்கிடுகிறார். ஒவ்வொரு கால் மணி நேரத்தையும் விஷ்ணு மணிகளில் கணக்கிடுகிறார். பின் நிக்ஷன், அர்ச்சனா மாறிக் கொள்கிறார்கள்.

பிக்பாஸ் மணி என்ன என்று கேட்க, 3.37 என்று சொல்கிறார் விஷ்ணு. ஆனால் உண்மையான நேரம் 3.50 ஆகியிருந்தது.

அடுத்தமுறை, பிக்பாஸ் மணி என்ன என்று கேட்க, 4.23 என்று சொல்கிறார் மணி. உண்மையான நேரமும் 4.23 ஆகியிருந்தது.

விசித்ரா தனது லைஃப்லைனை தருவதாக சொல்கிறார். அந்த நேரத்தில் நிக்ஷன் கேமரா பக்கம் சென்று விசித்ரா அம்மா ஓகேவா என சொல்லிவிட்டு, தனது லைஃப் லைனை இழக்க சம்மதிக்கிறார் நிக்ஷன்.

கழுவ போவது யாரு என்பதற்காக ஒரு டாஸ்க் வைக்கிறார்கள். அந்த டாஸ்க், பூட்டுக்கான சாவியைக் கண்டுபிடிப்பது. கண்டுபிடித்து வெற்றி பெற்றது ஸ்மால் பாஸ் டீம்.

இதனால் பிக்பாஸ் டீம் கூட்டப்போவதும் கழுவப்போவதும் தாங்கள்தான் என ஏற்றுக் கொள்கிறார்கள். தோற்றவர்கள்தான் இதனைசெய்ய வேண்டும் என பிக்பாஸ் நிபந்தனை விதித்திருந்தார்.

அடுத்தமுறை, பிக்பாஸ் மணி என்ன என்று கேட்க, 6.57 என்று சொல்கிறார் விஷ்ணு. உண்மையான நேரமும் 7.03 ஆகியிருந்தது.

டைம் பாம் டாஸ்க் முடிவுகள்

3 முறை சரியான நேரம் சொல்லப்பட்டது. 4 முறை தவறாக சொல்லியிருக்கிறார்கள்.

டைம் பாம்

டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில கலந்துக்க மாட்டாங்க என ரெண்டு பேரை சொல்ல வேண்டும் என கேட்கிறார் பிக்பாஸ்.

அர்ச்சனா மற்றும் விஜய் இருவரும் டிக்கெட் டு ஃபினாலே பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்