/* */

தொட்டாச்சிணுங்கி.... வெடித்து எழுந்த அர்ச்சனா! சமாளிக்கும் விஷ்ணு..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2 வது புரோமோ வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

தொட்டாச்சிணுங்கி.... வெடித்து எழுந்த அர்ச்சனா! சமாளிக்கும் விஷ்ணு..!
X

இன்றைய புரோமோ 2


ஒவ்வொருவரைப் பற்றி பெயர் கொடுக்கும் வகையில் ஏதோ ஒரு டாஸ்கை பிக்பாஸ் கொடுக்க, அதில் விஷ்ணு தொட்டாச் சிணுங்கி என அர்ச்சனாவைக் கூற பிரச்னை வெடிக்கிறது.

அவர் பேசும்போது அர்ச்சனா மிகவும் வருத்தப்பட்டதோடு பின் கோபமும் படுகிறார். விஷ்ணுவுடன் தான் தொட்டாச்சிணுங்கியா என்னை ஏன் அழுகாச்சி கண்டென்டிலேயே வைத்திருக்க டிரை பண்றீங்க என்று வெடித்து எழுகிறார். அதில் விஷ்ணு, பூர்ணிமா குறித்த பேச்சும் எழுகிறது. இதனால் புரோமோ பரபரப்பாகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நேற்றைய ஹைலைட்ஸ்

நிக்ஷனும் அக்ஷயாவும் வெளியில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது விக்ரம் வந்து அங்கு அவர் பிரச்னை செய்துகொண்டிருக்கிறார். பெட்டி விசயத்துல ஏற்பட்ட பிரச்னை என்று சொல்ல, நிக்ஷன் பதறிப்போய் உள்ளே செல்கிறார்.

உள்ளே சென்றதும் அங்கு பலரும் கூடி நின்று கத்திக்கொண்டு இருப்பதைப் பார்க்கிறான். அருகில் நெருங்கி சென்றதும் அவர்கள் சர்ப்ரைஸ் பர்த்டே கேக் வைத்திருப்பது தெரியவருகிறது. இதனால் மகிழ்ச்சியடையும் நிக்ஷனுக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். சரியாக 12 மணிக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கிறது.

அடுத்து சர்ப்ரைஸ் கிஃப்ட் என இந்த வார கேப்டன் தினேஷ், அவரின் கேப்டன் பொறுப்பை இன்று ஒரு நாள் நிக்ஷனிடம் கொடுப்பதாக கூறுகிறார். முதலில் நிக்ஷன் மறுத்தாலும், தினேஷ் சொல்லிவிட்டதால் சரி என ஒப்புக்கொள்கிறான். ஏற்கனவே தினேஷுடன் நிக்ஷன் உள்ளிட்டோருக்கு பிரச்னை இருக்கிறது.

உருட்டு அப்படி

14 பேர் பங்கேற்கணும்

டனலின் வழியாக கூடையில் பந்து போட வேண்டும்

குறைந்தது 7 பேராவது போட்டிருக்க வேண்டும்

தோற்றால் அடுத்த வார எவிக்ஷனுக்கு நாமினேசன் செய்ய வேண்டும்

விஷ்ணு தனக்கு 8 ஓட்டு இருப்பதாக வெளிப்படையாகவே பேசுகிறார். அதேநேரம் இந்த பக்கம் தினேஷ் தனக்கு 8 பேரின் ஆதரவு இருப்பதாக கூறுகிறார்.

மணி உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களும் இந்த ஆட்டத்தில் பங்கேற்கிறார்கள். ஆனால் யாருக்குமே கூடையில் பந்து விழவில்லை. இதனால் ஒருவரை நாமினேசன் செய்ய வேண்டும்

எவிக்ஷன் புராஸஸ்

அர்ச்சனா - ஜோவிகாவை நாமினேட் செய்கிறார்

விசித்ரா - தினேஷ்

விஷ்ணு - தினேஷ்

பூர்ணிமா - தினேஷ்

ஆர்ஜே பிராவோ - தினேஷ்

ஜோவிகா - தினேஷ்

நிக்ஷன் - கூல் சுரேஷ்

மாயா - தினேஷ்

ரவீனா - ஜோவிகா

தினேஷ் - ஜோவிகா

கூல் சுரேஷ் - தினேஷ்

தினேஷ் நேரடியாக அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்வாகிறார்.

தினேஷுக்கும் பூர்ணிமாவுக்கும் சண்டை மூழ்கிறது. தன்னை பேசவிடவில்லை என பூர்ணிமா தினேஷிடம் பேசுகிறார். சொம்பு தூக்காதீர்கள் என பேசுவது தினேஷுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது.

பூர்ணிமா, விஷ்ணுவை அழைக்கிறார். ஸ்டார் விசயத்தையும் தன்னுடைய நாமினேசனைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள். மாயாவும் பூர்ணிமாவும் சில விசயங்களை விஷ்ணுவுடன் கலந்துரையாடுகிறார்கள்.

தான் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பது ஏன், எந்த இடங்களில் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறேன் என்பதை விளக்குகிறார்.

பூர்ணிமா, மாயா இருவரும் பேசிக்கொள்கிறார்கள். பிளான் செய்கிறார்கள். நிக்ஷனை வெளியேற்றக் கூடாது என்பதையும் தினேஷ் கேப்டன் ஆகக்கூடாது என்பதையும் பூர்ணிமா திட்டம் போடுகிறார். தினேஷை பிளான் செய்து தூக்கியது தெரியவந்துள்ளது.

அர்ச்சனாவிடம் தன்னை ஏன் நாமினேட் செய்யவில்லை என தினேஷ் கேட்கிறார். பிராவோ புதுசா அந்த கேங்க்ல சேர்ந்திருக்கார் என்று சொல்கிறார் அர்ச்சனா.

டாஸ்க் 3 - பூகம்பம்

சீசா செட்டப்பில், ஒரு முனையில் காலை ஊன்றி கொடுக்கப்பட்ட நீள குச்சி உதவியுடன் பிளாக்குகளை அடுக்க வேண்டும். மாயா, நிக்ஷன் இருவரும் தனித்தனியே மொத்தம் 5 அடுக்கினாலும், அதை தோல்வி என்கிறார் பிக்பாஸ்.

வார இறுதியில் 3 பேர் வெளியே செல்ல இருக்கிறார்கள். 3 பேர் புதிதாக உள்ள வருகிறார்கள் என்கிறார் பிக்பாஸ்

ஆட்டம்பெர்க் டாஸ்க்

பந்துகளையும் எழுத்துகளையும் சேர்க்க வேண்டும். காலில் டிரேவை கட்டிக்கொள்ள வேண்டும். பசில்போர்டில் பசில்களை சரியாக அடுக்க வேண்டும்.

A,B என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுகிறார்கள். மணி, பிராவோ அணி வெற்றி பெற்றது.

வாழ்க்கையின் பூகம்பம்

பிராவோ தன்னை ஒரு ஆண் மிஸ்பிகேவ் செய்தார் என்பதை தன் வாழ்க்கையில் நடந்த பூகம்பமாக தெரிவித்தார்.

மணி தன்னுடைய பெங்களூர் டான்சர் ட்ரூப் வாழ்க்கையைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார். தன் வாழ்க்கையின் முதல் ஆடிசன் குறித்து பேச, அப்போது தன் அப்பா இறந்த நிலையில் தன் கனவு அன்று உடைந்ததாக பேசுகிறார். அப்பா தன்னுடைய வீடியோக்களை மொபைலில் வைத்திருந்ததாக அதை நினைத்து அழுகிறார்.

விஷ்ணு தன்னுடைய சித்தப்பாவைப் பற்றி பேசுகிறார். அவர் தன்னுடைய ஹீரோ எனவும், அவர் தான் இன்ஸ்பிரேசன் எனவும் பேசுகிறார். அவர் திடீரென மரணமடைந்ததைப் பற்றி பேசி அழுகிறார்.

Updated On: 24 Nov 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஆர்க்டிக் பனி உருகலை தடுக்கும் ராட்சஷ வைரஸ்கள்..! விஞ்ஞானிகள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞாவரா அரிசி தெரியுமாங்க..? தெரிஞ்சுக்கங்க..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்!
  4. தொழில்நுட்பம்
    திரிஷ்னா: பிரான்சுடன் இஸ்ரோவின் கூட்டுப் பணி பற்றி அனைத்து தகவல்களும்
  5. அரசியல்
    அயோத்தியில் பாஜக தோல்வி. அரசியல் அதிர்ச்சி! எங்கே தவறு நேர்ந்தது? ஒரு...
  6. இந்தியா
    சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் பாதுகாப்பு...
  7. குமாரபாளையம்
    மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள் மழையால் கொண்ட மகிழ்ச்சி!
  8. தமிழ்நாடு
    போன முறை 39, இந்த முறை 40 - ஆனாலும் வடை போச்சே.... ஏமாற்றத்தில்...
  9. குமாரபாளையம்
    மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு
  10. குமாரபாளையம்
    பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மரங்கள்! அப்புறப்படுத்த கோரிக்கை!