மணிக்கு கொடுக்கப்பட்ட ஸ்டார்! கடுப்பான மாயா!

மணிக்கு கொடுக்கப்பட்ட ஸ்டார்! கடுப்பான மாயா!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 2


முந்தைய நாள் ஹைலைட்ஸ்

நாள் 45

விஷ்ணுவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையில் ஏதோ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த டாபிக்கை அப்படியே விசித்ரா பக்கம் திருப்புகிறார்கள்.

விசித்ரா செய்த விசயங்களைப் பற்றி கலாய்த்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாயா அவரை கியூட் என்கிறார். ஆனால் பூர்ணிமா அவரை டேஞ்சராக பார்க்கிறார்.

அங்கு மணிசந்திரா, ரவீனா இருவரும் இருக்கிறார்கள். அங்கிருந்து நிக்ஷன் கிளம்பி சென்றுவிடுகிறார். அதனைத் தொடர்ந்து மணியும் ரவீனாவும் கிளம்பி சென்றுவிடுகிறார்கள்.

அவர்கள் சென்ற பிறகு பூர்ணிமா, மணியைப் பற்றி கோழை என்று கமெண்ட் செய்கிறார். ரவீனா செம்ம உஷாரான ஆளு என்று மாயா தெரிவிக்கிறார்.

இன்னொரு இடத்தில் பூர்ணிமா, மாயா, அர்ச்சனா, கானா பாலா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அர்ச்சனா விசித்ராவிடம் பேசுமாறு மாயா, பூர்ணிமா இருவரிடமும் தெரிவிக்கிறார்.

விசித்ரா, ரவீனா இருவரும் சமையல் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். கேம் ஆடுகிறார்கள் ஆனால் சமையலில் சுவை என்பது நிச்சயமாக பார்க்கப்படவேண்டும் என விசித்ரா தெரிவிக்கிறார்.

கேப்டன்ஷிப் போட்டியின் போது மாயா, பூர்ணிமா, ஐஸு, விஷ்ணு சேர்ந்து ஜோவிகாவை வெற்றி பெற விடாமல் செய்கிறார்கள் என்றால் அந்த கூட்டத்தில் ஜோவிகா என்ன செய்கிறார் என விசித்ரா கேட்கிறார்.

ஒருவரையொருவர் இமிடேட் செய்யும் டாஸ்க் ஒன்று வந்திருக்கிறது. அதைப் பொறுத்தவரையில் தினேஷ் மட்டும் இந்த ஆட்டத்தில் வெளியிலிருந்து வேடிக்கை மட்டும் பார்க்கவேண்டும்.

விசித்ரா கூல் சுரேஷ் வேடத்தில் வந்திருக்கிறார், கூல்சுரேஷ் அர்ச்சனா வேடத்தில் இருக்கிறார். மணிச்சந்திராவுக்கு பூர்ணிமா வேடம் கொடுத்துள்ளனர்.

இதுவரை வீட்டில் நடந்த சண்டைகளை மீண்டும் கண்முன் நடத்தி காண்பிக்க அது காமெடியாக வந்து நிற்கிறது.

தினேஷ் - ரகசிய டாஸ்க்

தினேஷுக்கு டிரிகர் செய்யும் ஒரு டாஸ்க் கொடுக்கிறார் பிக்பாஸ். அவர்தான் சிறந்த பர்ஃபாமரை தேர்வு செய்யவேண்டும்.

தினேஷ் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள ரகசிய டாஸ்க்கை அழகாக செய்கிறார். ஒவ்வொருவராக வம்பிழுத்து அதில் சிக்கிய விஷ்ணுவை வெளுத்து வாங்குகிறார்.

ஆனால் விஷ்ணு மாயாவாக கொஞ்சம் சிறப்பாக செய்கிறார். அடுத்து கொஞ்ச நேரத்தில் உண்மையிலேயே சண்டையாக மாறுகிறது.

புரோமோ பொறுக்கி என்று சொல்ல விஷ்ணு கடுமையான கோபத்தில் கத்த ஆரம்பிக்கிறார். இருவரும் பெரிய சண்டையாக ஆரம்பிக்கிறார்கள். தினேஷ், தனது டாஸ்க்கில் நிலையாக இருக்கிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்