நிக்ஷனுக்கு வைத்த ஆப்பு... ஒரே ஒரு நாமினேசன்..!

நிக்ஷனுக்கு வைத்த ஆப்பு... ஒரே ஒரு நாமினேசன்..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது

இன்றைய புரோமோ 1

இன்றைய முதல் புரோமோவில் நிக்ஷனை நாமினேசன் செய்து அனைவரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.


பிக்பாஸ் ஸ்பெஷல் எபிசோட்

கமல்ஹாசன் வந்ததும், உள்ளே நடக்கும் ஸ்ட்ராட்டஜி மற்றும் சில விசயங்களைப் பற்றி பேசியிருந்தார். பின் அகம் டிவி வழியே அகத்துக்குள் என்று சொல்லி, உள்ளே கொண்டு சென்றனர்.

வைல்டு கார்டு என்ட்ரியாக வரும் விஜய், அனன்யா இருவரது பாணியையும் வீட்டிலுள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கமல்ஹாசன் தெரிந்துகொள்ள விரும்புகிறார். அதனால் அனைத்து போட்டியாளர்கள் கைகளிலும் கோ பேக் மற்றும் ஸ்டே பேக் என்று ஸ்டிக்கர்களைக் கொடுக்கிறார்கள்.

அனன்யாவுக்கு பலரும் கோ பேக் என்று சொல்லிக் கொள்கிறார்கள். விஜய்க்கு ஸ்டே பேக் கொடுக்கிறார்கள். முடிவில்

விஜய், அனன்யா இருவருக்கும் சமமான அளவு கோ பேக், ஸ்டே பேக் கிடைத்துள்ள நிலையில், இதிலிருந்து என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

அனன்யா தன்னால் எந்த விளையாட்டும் விளையாடமுடியவில்லை. நான் நானாகவே இருக்கிறேன் என்று அவர் தெரிவிக்கிறார். ஒவ்வொருவரும் அவர் விளையாடுகிறார் இவர் விளையாடுகிறார் என்று சொல்கிறார்கள்.

மீண்டும் கமல்ஹாசன் உள்ளே வருகிறார். அகம் டிவி வழியே அகத்திற்குள்

அனன்யா காப்பாற்றப்படுவதாக தெரிவித்தார் கமல்ஹாசன்..

ஃபேவரைட்டிஸம்

அர்ச்சனா, ரவீனா உள்ளிட்டோர் மாயா, பூர்ணிமா, விக்ரம், நிக்ஷன் ஆகியோர் ஃபேவரைடிஸம் காண்பித்ததாக கூறினர். இதுபோல் அர்ச்சனா, கூல் சுரேஷுக்கு ஃபேவரைட்டிஸம் காண்பிக்கிறார். தினேஷ், மணிக்கு காண்பிக்கிறார் என்று நிக்ஷன் கூறுகிறார். விஜய் இந்த விசயத்தில் பூர்ணிமா விஷ்ணுவை மாட்டி விடுகிறார். இதில் அர்ச்சனாவையும் இழுத்து விடுகின்றனர்.

மொத்தமாக குழுவாக குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். சுரேஷையும் மாட்டிவிடுகிறார்கள்.

விக்ரம் அடுத்து தனது வருத்தத்தை சொல்கிறாரா். இப்படி ஃபேவரைட்டிஸம் செய்து திறமைகள் மதிக்கப்படாததாக மாறிவிடுகிறது. அது லஞ்சம் மாதிரியான ஒன்று. கொடுக்கிறதும் தப்பு வாங்கிறதும் தப்பு என்றார் கமல்ஹாசன்.

எலிமினேசன்

விசித்ரா,

தினேஷ்,

ஜோவிகா,

விக்ரம்,

மணி ஆகியோரில் ஒருவர் இன்று எலிமினேசன் ஆக இருக்கிறார். அதில் முதலில் விசித்ரா, தினேஷ் இருவரையும் மக்கள் காப்பாற்றிவிட்டதாக கூறுகிறார் கமல்ஹாசன். அடுத்து மீதமுள்ள ஜோவிகா, விக்ரம், மணி மூவரிலும் யார் வெளியேறிவார் என்று கேட்டபோது பெரும்பாலும் ஜோவிகாவை கூறினார்கள். ஜோவிகாவே தான்தான் வெளியே செல்ல இருப்பதாக கூறினார். அதன்படியே கமல்ஹாசனும் ஜோவிகாவை வெளியே வரச் சொல்லுகிறார். மக்கள் அவருக்குதான் குறைவான வாக்குகள் செலுத்தியிருக்கிறார் என்று சொல்ல, அவர் விடைபெறுகிறார்.

புத்தகப்பரிந்துரை

சத்யமூர்த்தி என்கிற இசை அவர்களின் கவிதைகள் புத்தகத்தை கமல்ஹாசன் பரிந்துரைத்துள்ளார்.

மாயா, அர்ச்சனாவிடம் நீங்கள் ஜோவிகாவை வெளியேற்றிவிட்டீர்கள் சந்தோஷமா என்று கூறுகிறார். அடுத்து பூர்ணிமா தான் உங்கள் கேங்கில் இல்லை என்று கூறுகிறார்.

அடுத்து விஜய் குறித்து பூர்ணிமா வருத்தப்படுகிறார்.

விஜய்யும் விசித்ராவும் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்கிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!