நான்சென்ஸ்... தினேஷை திட்டிய மாயா..! அடுத்த சண்டை இதோ..!

நான்சென்ஸ்... தினேஷை திட்டிய மாயா..! அடுத்த சண்டை இதோ..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 1



இன்றைய முதல் புரோமோவில் தினேஷுக்கும் மாயாவுக்கும் சண்டை எழுகிறது. தினேஷ் தன் கையைப் பிடித்ததாக கூறி சண்டையைத் தொடங்குகிறார் மாயா. இருவரும் ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்றனர்.

நேற்றைய ஹைலைட்ஸ்

கூல் சுரேஷ் ரூல்ஸ் பிரேக் செய்ததாக கூறி மாயா பிரச்னையைத் தொடங்குகிறார். இதனால் கேப்டனாக நிக்ஷன் கேள்வி கேட்க, அது பிரச்னையாக வெடிக்கிறது. இதனால் மாயாவுக்கும் நிக்ஷனுக்கும் இடையில் ஒரு வாக்குவாதம் உருவாகிறது. ஆனால் நிக்ஷனே தன் மீதுதான் தவறு என்று பிரச்னையை முடித்து வைக்கிறார்.

நீங்கள் தூங்கி எழுந்திருக்கும்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இன்னொருவராக மாறினால் என்ன செய்வீர்கள் என பிக்பாஸ் கேட்கிறார். அதற்கு ஒவ்வொருவரும் என்னென்ன செய்கிறார்கள் என சொல்கிறார்கள்.

மீண்டும் மாயா, நிக்ஷனுடன் மல்லுக்கட்டுகிறார். கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். உடற்பயிற்சி செய்ய வேண்டிய நிலையில் கூல் சுரேஷ், வெளியில் மழை பெய்ததால் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து உடற்பயிற்சி செய்தார் என மாயா குற்றச்சாட்டு சொல்கிறார்.

மாயா, கூல் சுரேஷிடம் உங்கள் மேல் எனக்கு எந்த பகையும் இல்லை ஆனால் உங்களை வைத்து கேப்டனை பழிவாங்க போகிறேன் என்று சொல்கிறார். இதனால் மாயாவின் உண்மையான நிறம் வெளியே வருகிறது.

மாயா ஒரு சூனியக்காரி போல மீண்டும் மீண்டும் திட்டம் போட்டு நிக்ஷனை அடிக்க நினைக்கிறார். ஆனால் நிக்ஷன் புத்திசாலித்தனமாக தப்பிக்கிறார்.

தினேஷ் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றை படிக்கிறார். அடுக்கப்பட்ட பிளாக்குகளை தட்டிவிடவேண்டும். டாஸ்க்கில் தோற்றால் அவர்களை கட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

முதலில் மாயா மற்றும் நிக்ஷன் இருவரும் ஆடுகின்றனர். அனைத்து பிளாக்குகளையும் தட்டிவிட்டுவிடுகின்றனர்.

அடுத்து விஷ்ணு மற்றும் விஜய் இருவரும் ஆடுகின்றனர். ஆனால் விஷ்ணு இதில் தோற்றுவிடுகிறார்.

மணி, ரவீனா ஆகியோரும் வென்றுவிடுகின்றனர். அனன்யா அடுத்து ஆடுகிறார். விக்ரமும் தோற்றுவிடுகிறார். பூர்ணிமாவை எல்லாரும் கலாய்க்கின்றனர்.

ஆனால் இந்த டாஸ்கில் தோற்றுவிடுகின்றனர். மூன்று மூன்று பேராக கட்டி வைக்கப்போகிறார்.

இதனிடையே விக்ரம் மற்றும் அர்ச்சனா இடையே திடீரென ஒரு சண்டை உருவாகிறது. முதல்முறையாக விக்ரம் அடித்து ஆடுகிறார். ஆனால் அர்ச்சனா கண்டென்ட் குடுக்க கூடாது என ஓடுகிறார்.

தோற்றதால் மூன்று இரண்டு பேராக கட்டி வைக்கப்பட இருக்கிறார்கள். பாத்ரூம் செல்வது தவிர மற்ற நேரங்களில் கைகள் கட்டியே இருக்க வேண்டும். பாத்ரூம் ஒருத்தர் மட்டுமே செல்ல முடியும். அந்த நேரத்தில் மற்ற இருவருக்கும் பனிஷ்மெண்ட் தரப்படும்.

விசித்ரா, கூல்சுரேஷ்

மணி, மாயா

விஷ்ணு, அர்ச்சனா

இந்த மூன்று அணிகளையும் வெறித்தனமாக மாட்டிவிட்டிருக்கிறார் பிக்பாஸ்

யாராவது கயிற்றைக் கழட்டினால் கூடுதலாக ஒருவரை இணைத்து விடுவார்கள் என்பது விதி. இதனால் மாயா - மணியுடன் தினேஷும், விஷ்ணு, அர்ச்சனாவுடன் பூர்ணிமாவும் இணைகிறார்கள்.

ப்ரோ கபடி லீக் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் அவர்கள் வந்து புரோமோசன் செய்கிறார்கள்.

விஷ்ணு, அர்ச்சனாவிடம் வாயைக் கொடுத்து அவரைத் தூண்டுகிறார். அவர் டென்சன் ஆகி சண்டையை ஆரம்பிக்கிறார். இதற்கு காரணம் ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல ரவீனா கிளப்பி விடுகிறார்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கும்போது அர்ச்சனா கொதித்தெழுகிறார். கத்தி கூச்சல் போடுகிறார். இந்த ஆளு கூடல்லாம் இருக்கணும்னு அவசியம் இல்ல என்று சொல்லி கயிற்றை அவிழ்த்துக்கொண்டு செல்கிறார். வெளியில் சென்று கதறி அழுகிறார் அர்ச்சனா.

Tags

Next Story