சர்வாதிகார ஆட்சி நடத்தும் நிக்ஷன்..! எதிர்ப்புகளை சம்பாதிப்பாரா?

சர்வாதிகார ஆட்சி நடத்தும் நிக்ஷன்..! எதிர்ப்புகளை சம்பாதிப்பாரா?
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 1

நிக்ஷன் ராஜாவாக பதவியேற்கிறார். அவர் சர்வாதிகார ஆட்சியை நடத்த இருக்கிறார். இது ஹவுஸ்மேட்களை அதிருப்தியடையச் செய்கிறது. அவர்களுக்கு தெரியாது இது பிக்பாஸின் நாடகம் என்பது. இருந்தாலும் நிக்ஷன் இதனை அருமையாக செய்துகொண்டிருக்கிறார்.

நேற்றைய ஹைலைட்ஸ்

இந்த வாரம் முழுக்க நான் வெஜ் இல்லை என பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதற்கு நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியே காரணம். பிக்பாஸ் ரசிகர்களிடம் இந்த வாரம் நீக்கப்பட வேண்டிய பொருள் எது என்று கேட்டபோது ரசிகர்கள் மீட் அதாவது மாமிசம் என்று கேட்டுள்ள நிலையில், அதை நீக்கியுள்ளார்.

பிக்பாஸ் ஷாப்பிங் சென்ற நிலையில் அனைத்து பொருட்களையும் சரியாக எடுத்தவர்கள், அரிசியை எடுக்க மறந்துவிட்டார்கள். இது மிகப்பெரிய அதிருப்தியாகி விட்டது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் இன்று முழுவதும் வீட்டில் இருக்க விரும்புவதாக கேட்க, அதற்கும் பிக்பாஸ் ஓகே சொல்கிறார்.

விஷ்ணு - அர்ச்சனா

திடீரென விஷ்ணுவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் சண்டை மூழ்கிறது. இதனை மூட்டிவிட்டது மாயா. ஆனால் தன் வாயால் தானே கெட்டதுபோல, அர்ச்சனா பேசிக்கொண்டே சண்டையை வளர்க்கிறார். இப்படி அர்ச்சனா கிடைத்ததும் அவரை வைத்து கண்டென்ட் செய்கிறார்.

தினேஷ் - விஷ்ணு

விஷ்ணு தன்னை டார்கெட் செய்யாமல், வீக் கண்டெஸ்ட்டன்ட்டான அர்ச்சனாவை டார்கெட் செய்வதாக கூறுகிறார் தினேஷ்.

மார்னிங் ஆக்டிவிட்டி

ஹரிஷ் கல்யாணிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்களை கேட்கலாம். ஃபன் இண்டர்வியூ என்று சொல்கிறார்கள்.

அர்ச்சனா - ஹரிஷ் கல்யாணின் முதல் படம் குறித்து கேள்வி எழுப்புகிறார்.

இதுபோல ஒவ்வொருவரும் ஒரு கேள்விகளைக் கேட்கின்றனர்.

விஷ்ணு, பூர்ணிமா கிச்சனிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அரிசி வாங்காமல் விட்டது ரொம்பவே தவறாகிவிட்டது என பூர்ணிமா வருத்தப்படுகிறார்.

வீட்டுப்பணி டாஸ்க்

கொடுக்கப்பட்ட டைல்ஸ்களை உயரத்துக்கு கட்டி எழுப்ப வேண்டும். யார் அதிக உயரம் எழுப்புகிறாரோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் ஸ்மால்பாஸ் அணி இதனை செய்து முடித்தது. அந்த அணியின் விஷ்ணு, பூர்ணிமா இதனை சிறப்பாக செய்து முடித்தனர்.

பார்க்கிங் பட ஹீரோ ஹீரோயின்

பார்க்கிங் படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், இப்போது ஹீரோயின் இந்துஜா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். அவர்கள் பார்க்கிங் படம் குறித்த விசயங்களைப் பேசினார்.

பார்க்கிங் படத்தின் டிரைலர் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு விடைபெற்றனர் இருவரும்.

குக்கிங் ஸ்டார்ட் ஆகும் முன்பே பிக்பாஸ் வீட்டில் எழுதி வைக்கவேண்டும் ஆனால் அப்படி எழுதவில்லை என்று விஷ்ணு சொல்கிறார். பூர்ணிமா இதை சப்ப மேட்டர் இதுலாம் ரொம்ப சில்லியா இருக்கு. இது வேலிடான பாய்ண்ட் இல்லை என்று சொல்கிறார் பூர்ணிமா. ஆனால் விஷ்ணுவை தூண்டி விடுகிறார் மாயா. இதனால் மாயா பூர்ணிமா மீது கோபப்படுகிறார்.

விஷ்ணு மணியை அடிக்கிறார். இந்த பிராதை பொதுவெளியில் வைக்கிறார். விஷ்ணு பேசிக்கொண்டிருக்கும்போது ரவீனா வேலிடான ஒரு கேள்வியைக் கேட்கிறார். ஆனால் விஷ்ணு நழுவி பதில் சொல்லாமல் செல்கிறார். இதிலிருந்தே அவரது நிலை தெரியவருகிறது.

நிக்ஷன் தனது விளக்கத்தை அழகாக கொடுக்கிறார். பிக்பாஸ் வீட்டில் ஸ்டவ் ஆன் பண்ண யார் அனுமதி கொடுத்தார் என நிக்ஷன் கேட்கிறார்? அதேநேரம் விஜய் திடீரென உள்ளே வந்து டிவிஸ்ட் கொடுக்கிறார்.

ஆனால் தனது சாமர்த்தியமான பதில்களால் நிக்ஷன் வெற்றி பெறுகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!