/* */

காலியாகும் நிக்ஷனின் கேப்டன் பதவி..! பிக்பாஸ் வைத்த செக்..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

காலியாகும் நிக்ஷனின் கேப்டன் பதவி..! பிக்பாஸ் வைத்த செக்..!
X

இன்றைய புரோமோ 1

ஹவுஸ்மேட் அனைவரையும் லிவ்விங் ஏரியாவுக்கு அழைத்து பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். இந்த அறிவிப்பு பிக்பாஸ் வீட்டின் கேப்டன் நிக்ஷனுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும் என்பது தெரிகிறது. காரணம் இதுவரை எந்த கேப்டனுக்கும் இல்லாத கடுமையான விதி இது.

அதாவது கேப்டனை நாமினேட் செய்ய அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கேப்டன் சரியாக செயல்படவில்லை என்று தெரிந்தால் அவரை நாமினேட் செய்யும் வகையில் அங்கு ஒரு மணி இருக்கும். அதனை அடிக்கலாம் என்கிறார் பிக்பாஸ்.

நேற்றைய எபிசோட் ஹைலைட்ஸ்

விமர்சனம் குறித்த தனது பார்வையை முன்வைத்துக் கொண்டே நிகழ்ச்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன்.

விமர்சனங்களை ஏற்றக் கொள்ளும் மனப்பக்குவம் தேவை. அது மற்றவர்களின் மீதுள்ள விமர்சனமாய் இருந்தால் அது சரி எனவும் தன் மீது விமர்சனம் எழுந்தால் அது தவறு எனவும் பேசுவது இங்கு நிறைய இருக்கிறது.

வீட்டுக்குள்ளே செல்லும்போதே இந்த டாபிக்குடன்தான் தொடங்கினார் கமல்ஹாசன்.

இந்த வீட்டில் யார் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்ற கேள்விக்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைக் கைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ச்சனா மீதும், மாயா, விசித்ரா மீதும் இந்த குற்றச்சாட்டுகள் அதிகம் எழுந்து வருகின்றன.

பூர்ணிமாவும் தன் மீது வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார் எனவும் போட்டியாளர்களில் சிலர் தெரிவித்தனர்.

அனைவருக்கும் சேர்த்தே கமல்ஹாசன் அதிரடியாக தனது பார்வைகளை தெரிவித்தார். தனக்கு யாரும் வசனம் எழுதி தரவேண்டாம் எனவும், நான் என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யத் தேவையில்லை எனவும் காட்டமாக கூறினார்.

அனைத்து நிபந்தனைகளுக்கும் சம்மதித்தே கையெழுத்து போட்டு உள்ளே வந்திருக்கிறீர்கள் என்பதையும் நினைவூட்டினார்.

பூர்ணிமா மீதும் சில மறைமுக விமர்சனங்களை சூசகமாக வைத்தார். ஆனால் அது அனைவருக்கும் பொருந்தும் வகையில் பேசி அனைவரையும் தங்களது ஆட்டங்களை சரியாக ஆட சொல்லி கேட்டுக் கொண்டார்.

விஜய் எண்ட்ரி

விஜய் மீண்டும் திரும்ப உள்ளே வந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு கண்டெஸ்ட்டன்ட்டும் இதை இதை உடைக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் அவங்க பிளஸ், மைனஸ் பாய்ண்ட்டுகளைச் சொல்லி அதை உடைக்க வேண்டும் என அவர்கள் முகம் பதித்த டைல்ஸ்களை உடைக்கிறார்.

மாயா இப்போது ரொம்பவே டவுன் ஆகிவிட்டார் என்கிறார். ரவீனா, மணி குறித்து சில விசயங்களைப் பகிர்ந்தார். கூல் சுரேஷ் குறித்த அவரது இரட்டை வேடம் குறித்தும் பேசினார். விஷ்ணுவின் ஸ்ட்ராட்டஜியும் விசித்ராவின் ஸ்ட்ராட்டஜியும் தெளிவாக தெரிந்துகொண்டு அடித்து ஆடுகிறார் விஜய்.

கடைசியாக கேப்டனாக இருக்கும் நிக்ஷன் பொய் சொல்வதுதான் அவனுடைய பிரேக்கிங் பாய்ண்ட் என்று சொல்கிறார் விஜய்.

புத்தகப் பரிந்துரை

Bend in the Ganges

by

Manohar Malgonkar


பூர்ணிமா, மாயாவுக்கு குட்டு

கமல்ஹாசன் நிகழ்ச்சியின் முடிவில் மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு குட்டு வைத்துச் சென்றார். நிக்ஷனுக்கும் வார்னிங் கொடுத்திருந்தார். பின் அனைவரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கமல்ஹாசன், அனன்யாவை வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்.

அனன்யா தன்னுடன் கொண்டு வந்த டேக்ஸை அவரவர் குணத்துக்கு ஏற்றவாறு கொடுக்கிறார்.

  • விஷ பாட்டில் - மாயா
  • நரி- விசித்ரா
  • கொசு - கூல் சுரேஷ்
  • கிரிஞ்ச் - நிக்ஷன்
  • நூலாட்டி பொம்மை - ரவீனா
  • மிக்சர் - விக்ரம்
  • சொம்பு - அர்ச்சனா
  • செக்யூரிட்டி - விஷ்ணு
  • காலி பாத்திரம் - ஜோவிகா
  • தவளை - பூர்ணிமா
  • பூமர் - மணி
Updated On: 27 Nov 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...