கலக்கல் உடையில் கமல்ஹாசன்...! வெளியானது பிக்பாஸ் புரோமோ

கலக்கல் உடையில் கமல்ஹாசன்...! வெளியானது  பிக்பாஸ் புரோமோ
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 1


நாள் 47

மாயாவுக்கு விசித்ரா மீது பயங்கரமான கோபம் இருப்பது போல தெரிகிறது. விசித்ரா பேசியதை அப்படியே நிக்ஷனிடம் சொல்கிறார் மாயா.

நிக்ஷண் - ஐஸு விசயத்தைப் பற்றி பேசுகிறார் விசித்ரா எனவும், அவர் ஐஸு கேரக்டரை மீண்டும் டேமேஜ் செய்கிறார் என சொல்கிறார்.

பூர்ணிமாவும் விஷ்ணுவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டார் வாங்கியது குறித்து பூர்ணிமா பேசுகிறார். இருவரும் ஏதேதோ பேசி பின் அது நகர்ந்து நகர்ந்து இருவரும் தங்களைப் பற்றி பேசுவது போல வருகிறது. நீ உண்மையிலேயே யார் என விஷ்ணுவைப் பார்த்து கேட்கிறார் பூர்ணிமா.

சரி நான் ஓபனாக சொல்லிவிடவா எனக்கு ஒரு ஃபீலிங் இருக்கிறது நீங்க என்ன பத்தி வேற யாருக்கிட்டயும் பேசுறீங்கன்னு தோணுது என்கிறார். நான் உங்களைப் பற்றி பேசுவதில்லை என்று விஷ்ணு சொல்லிவிட்டு, தன்னைப் பற்றி நீங்கள் ஏதும் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறீர்களா? என விஷ்ணு கேட்கிறார். பின் இருவரும் ரகசியமாக கேம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மாயா தன்னிடம் விஷ்ணுவை நம்ப வேண்டாம் என்று சொல்லியதாக உளறிவிடுகிறார் பூர்ணிமா. பின் மாயாவை நான் போடுவதாக இருந்தா போடுவேன். நாங்கள் அப்படி ஒருவரையொருவர் காப்பாற்றவில்லை. நான் மாயாவை நாமினேட் செய்வேன் மாயா என்னை நாமினேட் செய்வார் என்று கூறுகிறார்.

நீங்கள் பேசுகிறீர்களே தவிர செய்யமாட்டேங்கிறீர்களே என்று சொல்கிறார் விஷ்ணு. இருவரும் ரகசியமாக பேசினாலும் இதில் எதுவும் இல்லை. ஆனால் வெளியிலிருந்து பார்த்தால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தோன்ற வாய்ப்பிருக்கிறது.

மாயா, ஜோவிகா, நிக்ஷன், விக்ரம் ஆகியோர் சமையலறையிலிருந்து கிசுகிசுவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது விஷ்ணு, பூர்ணிமா பற்றி பேசியதாகவே இருக்கிறது.

பின் தனியாக மாயா, பூர்ணிமா பேசிக் கொள்கிறார்கள். நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சி விஷ்ணு பூர்ணிமாவை வெளியே அனுப்ப பார்க்கிறார் என்று மாயா சொல்கிறார். விஷ்ணு பூர்ணிமாவை யூஸ் செய்கிறார் என்று சொல்லி, அவன் என்ன உன் புருசனா என்று சொல்லி, கலாய்க்கிறார் மாயா. ஆனால் பூர்ணிமா, விஷ்ணுவிடம் வீழ்ந்துவிடுவார் என்று மாயா கணிக்கிறார்.

விசித்ரா வேடம் போட்டு, அதை நிக்ஷன் விவரிக்கிறார். இதனால் இருவருக்கும் முட்டிக் கொள்ள போகிறது என்பது நன்றாக தெரிகிறது. நிக்ஷன் பேச பேச, அது விசித்ராவை கலாய்ப்பது போல தெரிகிறது. இதனால் கொஞ்சம் காண்டாகிறார்.

விசித்ரா, கூல் சுரேஷின் டிரெஸ் சென்ஸை கலாய்க்கிறார். ஆனால் அதை பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை. அனைவரும் சிரித்துக்கொண்டே அமைதியாக இருக்கிறார். நல்லபடியாக பேசியதுபோல தெரிஞ்சாலும் அவர் கூல் சுரேஷை வாரிக்கொண்டே இருக்கிறார்.

கூல் சுரேஷ், அர்ச்சனா குறித்து பேசினார். அவரின் அழுகையை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன் என வருத்தப்பட்டார். ஆனால் கடைசியில் கலாய்த்துவிட்டு சென்றார். பின் அர்ச்சனா, விக்ரம் பற்றியும், விக்ரம், ரவீனா பற்றியும் பேசினர்.

விக்ரமுக்கு அனைவரும் பாராட்டுக்களை அள்ளித் தெளித்தனர். மணி, பூர்ணிமா குறித்து பேசினார். மாயா, பூர்ணிமா குறித்து மணி பேசியது போதுமானதாக இல்லை என பேச ஆரம்பிக்கிறார்.

மணியும் அர்ச்சனாவும் தனியே பேசிக் கொள்கிறார்கள். அவர்களுடன் கானா பாலா, ரவீனா இருவரும்பேசிக் கொண்டிருக்கிறார்கள். பூர்ணிமா, விக்ரமுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

விசித்ராவும், நிக்ஷனும் சண்டை போட ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பத்தில் நார்மலாகபேச ஆரம்பிக்கும்போது, ஐஸு பற்றிய பேச்சு ஆரம்பிக்கிறது. ஐஸுவை தள்ளிவிட்டு அர்ச்சனாவை கட்டியாக பிடித்துக் கொண்டார்கள். இப்போது நிக்ஷன் அழகாக விசித்ரா வாயாலேயே சொல்ல வைக்கிறார்.

ஐஸு வெளியே போனதுக்கு காரணம் நிக்ஷன்தான் என விசித்ரா பேசினார் என்று சொல்ல, முதலில் மறுத்தவர் பின் ஒத்துக்கொண்டுள்ளார். நடு ராத்திரி பேசிக் கொண்டிருக்கும்போது ஐஸுவை கண்டித்தேன் என நான்தான் சொன்னேன். ஐஸுவிடம் நான் சொன்னேன் ஏன்னா அவதான் என் பொண்ணு மாதிரி நீ இல்ல என்று சொல்கிறார் விசித்ரா.

ஐஸு போனது உனக்கு கில்ட்டியாக இருக்கிறது என்று விசித்ரா, நிக்ஷன் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். நிக்ஷனும் விசித்ராவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வரேன் விசித்ரா பாய் என்று சொல்லிச் செல்கிறார். விசித்ரா மீண்டும் ஏதேதோ சொல்கிறார். ஆனால் நிக்ஷன் கோபமடைகிறார்.

அர்ச்சனா மீண்டும் நிக்ஷன் பற்றி பெரிய பேச்சைத் தொடங்குகிறார். ஐஸு வெளியே போனார் என்று கொளுத்திப் போட அர்ச்சனாவுக்கும் நிக்ஸனுக்கும் இடையில் பெரிய பிரச்னை ஏற்படும் என நினைத்தால் அது நடக்கவில்லை. ஆனால் விஷ்ணு, மாயா இடையே பிரச்னை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவும் புஷ்ஷென்று முடிகிறது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!